வெள்ளி, 27 ஏப்ரல், 2012

நடிகை ரேகாவும் ராஜ்யசபா எம்.பியானார்!

சச்சின் டெண்டுல்கரைப் போலவே மாஜி நடிகை ரேகாவும் ராஜ்யசபா எம்.பியாகியுள்ளார். அவரது பெயரையும் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் அனு ஆகா ஆகியோரை ராஜ்யசபா எம்.பியாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இவர்களைப் போலவே பழம்பெரும் இந்தி நடிகை ரேகாவையும் அக்கட்சி ராஜ்யசபை எம்.பியாக்கியுள்ளது.

இவர்கள் மூன்று பேரின் நியமனத்துக்கான ஆலோசனைக் குறிப்பை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பினார். பின்னர் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து மூன்று பேரையும் நேற்று ராஜ்யசபா உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் நியமனம் செய்தார்.
தென்னகத்தைச் சேர்ந்த ரேகா, மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் மகள் ஆவார். இந்தியில் பல காலமாக முன்னணி நாயகியாக திகழ்ந்தவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக