வியாழன், 26 ஏப்ரல், 2012

நடிகை புவனாவின் தியேட்டரைப் பறிக்கப் பார்த்த கோஷ்டி-போலீஸ் வலைவீச்சு!

Bhuvana
கோவையைச் சேர்ந்த சினிமா நடிகை ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாங்கிய சிலர், அந்த வீட்டோடு இணைந்துள்ள நடிகையின் தியேட்டரையும் அபகரிக்க முயன்றனர். அதைத் தட்டிக் கேட்க முயன்ற நடிகைக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் இதுதொடர்பாக ஐந்து பேரைத் தேடி வருகின்றனர்.
கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் புவனா என்கிற புவனேஸ்வரி. இவரது தந்தை பாலசுப்ரமணியம், தாயார் பெயர் சம்பூர்ணம். இவர்கள் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். பூர்வீகம் கோவை அன்னூர் ஆகும்.

சூப்பர்டா, கலக்குற சந்துரு உள்ளிட்ட சில படங்களிலும் தலை காட்டியுள்ளார் புவனா. இவருக்கு சொந்த ஊரில் ஒரு தியேட்டரும், 2 வீடுகளும் உள்ளன. இதில் வீடுகள் இரண்டையும் தென்னம்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியத்திற்கு ரூ. 50 லட்சத்திற்கு விற்று விட்டார். தியேட்டரை சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த இன்னொரு சுப்பிரமணியத்திற்கு விற்க முடிவு செய்தார்.

இதுதொடர்பாக தனது தாயாருடன் புவனா அன்னூர் வந்தார். அப்போது தியேட்டருக்கு அவர் போனபோது ஏற்கனவே வீடுகளை வாங்கிய சுப்பிரமணியம், அவரது மனைவி, மகன் உள்பட 5 பேர் அங்கு வந்தனர். வீட்டோடு தியேட்டரையும் நாங்களை வாங்கி விட்டோம். எனவே இதை விற்க முடியாது என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் புவனாவுக்கு கொலை மிரட்டலும் விடுத்தனராம்.

இதையடுத்து அன்னூர் போலீஸில் புகார் கொடுத்தார் புவனா. இதையடுத்து போலீஸார் ஐந்து பேரையும் தேடி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக