சனி, 7 ஏப்ரல், 2012

பாரதிராஜா படத்தில் இருந்து இனியா நீக்கம்

பாரதிராஜா எடுக்க உள்ள அன்னக்கொடியும், கொடி வீரனும் படத்திற்கு தலைப்பு வைத்த நேரமா அல்லது கதை எழுதிய நேரமா என்று தெரியவில்லை.. படம் எடுப்பது குறித்து பேச ஆரம்பித்ததில் இருந்து அவர் நீக்கம், இவர் நீக்கம் என்று தான் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்...படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் முதலில் பார்த்திபன் நடிப்பதாக பேசப்பட்டு பிறகு அவரை நீக்கிவிட்டு அமீரை வைத்தார். அப்புறம் அவரும் போய் பாரதிராஜா தனது மகனையே நடிக்க வைப்பதாக முடிவானது. தற்போது இனியாவும் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியானது. வெளியான தகவல் உண்மைதானா என்று கேட்க, இனியாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.அமீரையும், என்னையும் வைத்து எடுத்த காட்சிகளை தன்னுடைய அடுத்த படத்தில் பயன்படுத்திக் கொள்வதாக பாரதிராஜா சார் கூறியுள்ளார். எனவே, அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நான் நடிக்காதது குறித்து வருந்தவில்லை என்று மிகவும் வருத்தத்தோடு கூறினார் இனியா.மேலும், பல நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். கதைக்குத் தேவைப்பட்டால் நிச்சயமாக கவர்ச்சியாகவும் நடிப்பேன் என்றார் அவர். வாகை சூட வா படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இனியா, அடுத்து மௌனகுரு படத்திலும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக