செவ்வாய், 3 ஏப்ரல், 2012

அமலா-ஆர்யா பிரிவிற்கு காரணம் முத்தமா!

திடீரெனஒருநடிகை பிரபலமானாலே கிசுகிசுக்கள் வருவது சகஜம் தான். ஆனால் அவை அடுத்தடுத்து பறந்துகொண்டே இருந்தால் யார் தான் பொருத்துக் கொள்வார்கள்.
இந்நிலையில் தான் இருக்கிறார் நடிகை அமலா பால்.சில நாட்களுக்கு முன் ஆர்யாவிற்கும் அமலா பாலுக்கும் காதல் என்று பரபரப்பாக பேசப்பட்டு அதன் பின் அனைவருக்கும் தனித்தனியே விளக்கம் கொடுக்கப்பட்டு இல்லை என்பது போல் ஆனது. அதன் பிறகு ஆர்யா ”வேட்டை படத்தில் வரும் முத்தக் காட்சியில்(லிப்-டூ-லிப்) எனக்கு சங்கடமாக இருந்த போது
எந்த வித தயக்கமும் இல்லாமல் அமலா மொத்த யூனிட் முன் முத்தம் கொடுத்தார்” என்று பேட்டி ஒன்றில் 
கூறியதால் இருவருக்கும் இடையே இருந்த நட்பு(?) உடைந்து ஆர்யாவின் புதுவீட்டில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் அமலா பால் கலந்துகொள்ளவில்லை என்று பேசப்படுட்டது.இதற்கு பதிலளித்துள்ள அமலாபால் “ நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை. அந்த நிகழ்ச்சியின் போது நான் துபாயில் இருந்தேன். அதனால் தான் வர முடியவில்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான்” என்று பதிலளித்துள்ளாராம். துபாய் எங்கப்பா இருக்கு? தூத்துக்குடி பக்கம் திருநெல்வேலி பக்கம் தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக