செவ்வாய், 10 ஏப்ரல், 2012

உதயநிதி இனியும் நடிக்க போகிறார் ஜாக்கிரதை

தயாரிப்பாளராக இருந்து நடிகர் அரிதாரம் பூசிய உதயநிதி நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படம்  புத்தாண்டுக்கு வெளிவர உள்ளது. இந்நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்  உதயநிதி. இதற்காக அவர் தற்போது கதை கேட்கும் பணியில் இறங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தொடர்ந்து நகைச்சுவை கலந்த பொழுதுபோக்குப் படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். தொடர்ந்து 2 அல்லது 3 நகைச்சுவைப் படங்களில் நடித்துவிட்டு பிறகு வேறு அம்சங்கள் கொண்ட படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன் என்கிறார்.இந்த நேரத்தில், சந்தானத்திற்கும், ஹன்சிகா மோத்வானிக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். படப்படிப்பின் போது எனக்கு நிறைய ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். எனக்கு காமிரா முன்பு நிற்பதும், வசனம் பேசுவதும் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், படக்குழுவினர் தான் எனக்கு பெரிதும் உதவினார்கள் என்றார் உதயநிதி. இனியும் நடிக்க போகிறார் ஜாக்கிரதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக