ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

பாரதிராஜா, டி ராஜேந்தர், செல்வமணி தலைமையில் போட்டி தொழிலாளர் சங்கம்

சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சிக்கு போட்டியாக, புதிய சங்கத்தை இன்று தொடங்கினர் தயாரிப்பாளர்கள்.
இந்த புதிய சங்கத்துக்கு இயக்குநர்கள் பாரதிராஜா, டி ராஜேந்தர் மற்றும் ஆர்கே செல்வமணி நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புது சங்கத்திற்கு 'தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் நலச்சங்கம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. யூனியன் என்று இருந்தால் பிரச்சினை என்பதற்காக சங்கம் என்று இதனை அறிவித்துள்ளனர்.
பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, டி.ராஜேந்திரர் ஆகியோர்தான் இந்த புதிய சங்கத்தின் பொறுப்பாளர்களாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சங்கத்தின் அடையாள அட்டையுடன் ஊழியர்கள் படப்பிடிப்புகளில் இன்று பங்கேற்றனர்.
இந்த புதுசங்கத்தால் ஃபெப்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே உள்ள மோதல் வலுக்கிறது.
இதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு தயாராகிறது பெப்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக