வெள்ளி, 6 ஏப்ரல், 2012

போலி என்கவுன்டர் வழக்கில் BJP எம்.எல்.ஏ. கைது

ஜெய்ப்பூரில் சாராயக் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் தாராசிங். கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறப்பு காவல் படையினர், கடத்தல்காரர் தாராசிங்கை காவலில் எடுத்தனர். பின்னர் தாராசிங்கை சட்டவிரோதமான முறையில் ஆளில்லாத இடத்தில் வைத்து, சுமார் 5 மாதங்கள் விசாரிக்கப்பட்டார்.
பின்னர் அவர் திட்டமிட்டு என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.இந்தப் போலி என்கவுன்டர் வழக்கை சிபிஅய் விசாரித்து வந்தது. இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் காவல்துறை உதவி இயக்குநர் ஏ.கே.ஜெயின், சிபிஅய் சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கெனவே சரணடைந்து விட்டார். இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம், தாராநகர் தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ ராஜேந்திர ரத்தோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சரணடைந்த ஏ.கே.ஜெயினுடன், ரத்தோர் எப்போதும் தொலைப்பேசி தொடர்பில் இருந்து வந்துள்ளார். ஆனால் தான் தவறுதலாக கைது செய்யப்பட்டிருப்பதாகவும், வழக்கிலிருந்து விரைவில் மீண்டு, கட்சியை பலப்படுத்த இருப்பதாகவும் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக