சனி, 28 ஏப்ரல், 2012

பந்தா பரமசிவம் படத்தின் Hindi ரீமேக் ஹவுஸ்புல் 2 House full

இந்தியில் 100 கோடி! தமிழில் 2 கோடி!தமிழில் ரிலீஸாகி சரவெடி வெடித்த படங்கள், ஒரு சில சமயங்களில் இந்தியில் ரிலீஸாகும் போது புஸ்வானம் ஆகிவிடுகின்றன.தற்போது இந்தியில் ரிலீஸாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் “ஹவுஸ்புல் 2”. 
இந்த படம் ரிலீஸான சில நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டதாம். இதற்கும் தமிழ் சினிமாவிற்கும் என்ன தொடர்பு என்றால், இந்த படம் 2003ல் தமிழில் வெளியான “பந்தா பரமசிவம்” என்ற படத்தின் ரீமேக் என்கிறார்கள். பந்தா பரமசிவம் ஒரு காமெடி படம். பந்தாபரமசிவம் படத்தின் பட்ஜெட் 2 கோடி ரூபாய் தான். அந்த படத்தை இந்தியில் 79 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்து 130 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்து விட்டார்கள். ஆனால் ’பந்தா பரமசிவம்’ படமும் ’மாட்டுப்பெட்டி மச்சான்’ என்ற மலையாள படத்தின்ரீமேக்காம்.;"வெளிநாடுகளில் அதிக அளவில் திரையிடப்பட்ட நான்காவது பெரிய படம் என்ற அந்தஸ்தத்தை ஹவுஸ்புல் 2 பெற்றுள்ளது.
இந்த படத்தில் இந்தி திரை உலக நட்சத்திரங்களான அக்‌ஷய் குமார், ஜான் ஆபிரகாம், ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் நடித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக