புதன், 25 ஏப்ரல், 2012

இப்பவே பார்வதி இப்படின்னா!பில்லா-2 !


பில்லா-2 படத்தின் டிரெய்லரும், போஸ்டர்களுமே ரசிகர்களை சூடாக்கிக் கொண்டிருக்க வருகிற மே-1ஆம் தேதி பில்லா-2 படத்தின் பாடல்களை வெளியிட இருக்கும் படக்குழுவினர் இசையுடன் கொஞ்சம் கிளுகிளுப்பையும்வெளியிடுகின்றனர்.பில்லா-2 படத்தில் நடிக்கும் நடிகைகள் பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா ஆகியோர் சினிமவிற்கு வருவதற்கு முன் மாடல் அழகிகளாக இருந்தனர். இந்த இரு நடிகைகளையும் எடக்குமுடக்காக போஸ் கொடுக்க வைத்து ஒரு காலண்டர் தயாரித்துள்ளனர். இந்த காலண்டருக்கான போட்டோ ஷூட் கோவாவில் நடந்ததாம். கோவா கடற்பரப்பில் உள்ள மணல்களிலும், கடல்நீரிலும் புரண்டு புரண்டு போஸ் கொடுத்தார்களாம்.  இசை வெளியீடு 
நடைபெறும் போது அந்த காலண்டரையும் கொடுத்து ரசிகர்களை அசத்தப்போகிறார்களாம்.நடிகைகள் திறம்பட தங்கள் வேலையை முடித்துவிட்டதால் இப்போது காலண்டர் அச்சிடும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் என தெரிகிறது.(எங்க பிரிண்ட் பண்ணுவாங்கனு தெரியாது பாஸ்)பில்லா-2 இசை வெளியீட்டிற்கு அஜித் வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்வியுடன் காலண்டரில் போட்டோ எப்படி இருக்கும் என்ற கற்பனைகளும் ரசிகர்கள் மனதில் ஓட ஆரம்பித்துவிட்டது.காலண்டருக்கே இப்படின்னா படத்துல எப்படியோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக