வியாழன், 29 மார்ச், 2012

Sasikala:300 ஆவணங்களைக் கொடுங்க, அப்பத்தான் தெளிவா பதில் சொல்ல முடியும்

பெங்களூர்: சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றத்தி்ல ஆஜராகி படு நிதானமாக கேள்விகளுக்குப் பதிலளித்து ஏற்கனவே நீதிபதியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் சசிகலா, தற்போது புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 300 ஆவணங்களைத் தனக்குத் தர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா ஆஜராகி நான்கு நாட்கள் வாக்குமூலம் அளித்தார்.
தற்போது சசிகலா ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார். அவரிடம் கேட்பதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளைத் தயார் படுத்தி வைத்திருந்த அரசுத் தரப்பு சசிகலா பதில் சொல்கிற வேகத்தைப் பார்த்து கடுப்பாகி நிற்கிறது.
ஒவ்வொரு கேள்விக்கும் நிறுத்தி நிதானமாக யோசித்தபடி பதிலளித்து வருகிறாராம் சசிகலா. இது நீதிபதி மல்லிகார்ஜுனாவையே எரிச்சலில் ஆழ்த்தியுள்ளது.
இந்தநிலையில், இன்று சசிகலா பெங்களூர் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவரது வழக்கறிஞர் ஒரு மனுவை அளித்தார். அதில், வழக்கு தொடர்பான 300 ஆவணங்களை சசிகலாவுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் தெளிவாக பதில் சொல்ல முடியும் என கோரப்பட்டிருந்தது.
இதற்கு அரசுத் தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இது வழக்கை இழுத்தடிக்கும் இன்னும் ஒரு முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை என்றார் அரசு வழக்கறிஞர். மேலும் சசிகலாவின் புதிய மனு தொடர்பான பதில் மனுவை நாளைக்கு தாக்கல் செய்வதாக அரசுத் தரப்பு கூறவே மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக