ஞாயிறு, 11 மார்ச், 2012

Kerala கம்யூனிஸ்ட் MLAக்கு காங்கிரஸ் 20 கோடி லஞ்சம் உம்மன்சாண்டியின்

திருவனந்தபுரம்: ராஜினாமா செய்த நெய்யாற்றின்கரை மார்க்சிஸ்ட் எம்எல்ஏ செல்வராஜுக்கு முதல்வர் உம்மன்சாண்டியின் வீட்டில் ரூ.20 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கேரள எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் குற்றம்சாட்டி உள்ளார். கேரளாவில் நெய்யாற்றின்கரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ.வாக இருந்த செல்வராஜ், நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார். இது, கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜினாமா செய்வதற்கு ஒருநாள் முன்பு வரை கூட சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட்  சார்பில் செல்வராஜ் பேசினார். ஆனால், அன்றிரவே யாருக்கும் தெரியாமல் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். மறுநாள் காலையில் தனது ராஜினாமா பற்றி செல்வராஜ் அறிவிக்காத வரை, மார்க்சிஸ்ட் கட்சியினர் யாருக்கும் இந்த விபரம் தெரியாது.
வரும் 17ம் தேதி பிரவம் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் தோல்வி அடைந்தால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழும் அபாயம் இருந்தது. இதை இடது முன்னணி தலைவர்களும் சூசகமாக கூறியிருந்தனர். அதை சீர்குலைக்கும் வகையில், செல்வராஜ் ராஜினாமா செய்தது மார்க்சிஸ்ட் கட்சியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான அச்சுதானந்தன் நேற்று அளித்த பேட்டியில்,

செல்வராஜின் ராஜினாமாவுக்கு அரசு கொறடா ஜார்ஜ் தூண்டுகோலாக இருந்துள்ளார். இவர்தான்  2 தினங்களுக்கு முன் அதிகாலை 5 மணியளவில் உம்மன்சாண்டியின் வீட்டுக்கு செல்வராஜை அழைத்து சென்றுள்ளார். அங்கு செல்வராஜுக்கு ரூ. 20 கோடி பணம் கைமாறியுள்ளது. ஆட்சியை காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் கட்சியினர் இந்த சதித் திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். செல்வராஜின் ராஜினாமாவால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பிரவம் இடைத்தேர்தலில் இடது முன்னணி வேட்பாளர் வெற்றி பெருவது உறுதி என்றார். ராஜினாமா செய்த பிறகு செல்வராஜ் கூறுகையில், எந்த காரணத்தை கொண்டும் காங்கிரசில் சேர மாட்டேன். அதை விட தற்கொலை செய்வேன் என்றார். ஆனால் நேற்று அவர் அளித்த பேட்டியில், எனது ஆதரவாளர்களின் விருப்பம் எதுவோ அதன்படி செயல்படுவேன். நெய்யாற்றின்கரை தொகுதிக்கு தேர்தல் வரும்போது எனது ஆதரவாளர்கள் கூறும் ஆலோனைபடி நடந்து கொள்வேன் என்றார். செல்வராஜ் விவகாரம் குறித்து முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், செல்வராஜ் காங்கிரசுக்கு வர விரும்பினால், அது பற்றி பரிசீலிக்கப்படும். அவரை எங்கள் கட்சிக்கு இழுக்க மாட்டோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக