ஞாயிறு, 4 மார்ச், 2012

புலம்பித் தள்ளும் ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாஸன் தனுஷுடன் இணைந்து நடித்துள்ள படம் 3. மார்ச் 30ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் நடித்துள்ள இவர்களிடையே கெமிஸ்ட்ரி ஒத்துப்போனதோ இல்லையோ இருவரின் குறை மட்டும் ஒரே மாதிரி இருக்கிறது. 
சில நாட்களுக்கு முன், நான் ரஜினியின் மருமகனாக பார்க்கப்படுகிறேன். என்சுய கௌரவத்தை இழந்துவிட்டேன் என தனுஷ் பகிரங்கப் பேட்டி கொடுத்தார். இப்போது ஸ்ருதிஹாஸன் ”என்னை கமல் மகளாக பார்க்காதீர்கள். கமல் மகளாக மட்டும் இருந்தால் சினிமாவில் நிலைத்து விட முடியாது.
 திறமை இருந்தால் தான் சினிமாவில் வெற்றி பெற முடியும்.  கமல்ஹாஸனின் மகள் என்ற போர்வை சினிமாவில் நுழைய ஒரு வாய்ப்பாக அமைந்ததே தவிர அது என்னை கடைசி வரை தாங்காது. 
வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து திரைத்துறையில் எனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என்பதே என் எண்ணம். பசி இருப்பவனுக்குத் தான் உணவின் அருமை தெரியும்” என்று புலம்பி தள்ளியிருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக