வியாழன், 29 மார்ச், 2012

மலையாள ஆவி கதை தமிழுக்கு மொழி மாற்றம்

;மலையாளத்தில் வினயன் இயக்கிய படம் யக்ஞையும் யானும். காதல் ஜோடிகளை வில்லன் கொல்ல, அந்த ஆவிகள் மோதிரம் வழியாக ஹீரோவின் உடம்புக்குள் புகுந்து தன்னை கொன்றவர்களை எப்படி பழிவாங்குகிறது என்ற கருவை மையமாக வைத்து உருவானது.
இப்படம் தெலுங்கில் லங்கேஸ்வரி என்ற பெயரில் வெளியானது. தற்போது தமிழில் ஜக்கம்மா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது.காதல் ஜோடி ஆவிகளாக கவுதம், மேக்னா ராஜ் நடித்துள்ளனர். வில்லன்களாக தேவ், திலகன், ராஜ் நடித்துள்ளனர். இது பற்றி பட வசனகர்த்தா பாலா.ஆர் கூறும்போது, மலையாளத்தில் இப்படத்திற்காக அமைக்கப்பட்ட இசை எபெக்ட் பகுதிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, புதிதாக 15 நாட்கள் சவுண்ட் மிக்ஸிங் செய்யப்பட்டுள்ளது. தமிழுக்கு சில பகுதிகள் ரீ ஷூட் செய்யப்பட்டு இணைக்கப்பட்டது. மோகினி வேடத்தில் கவர்ச்சியாக  நடித்திருக்கிறார் மேக்னா ராஜ் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக