திங்கள், 26 மார்ச், 2012

பொய்மையே வெல்லும்! எம்.நடராஜன் பேட்டி!

சில வழக்குகளில் கைதாகி திருச்சி சிறையில் இருந்த எம்.நடராஜனை, தஞ்சாவூர் தமிழ் நகர் சகுந்தலா கொடுத்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக தஞ்சாவூர் ஜெஎம்2 நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
இந்த வழக்கில் 09.04.2012 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.நடராஜன், தமிழக அரசு வாய்மையே வெல்லும் என்று சொல்லுகிறது. ஆனால் பொய் வழக்குகளே போடுவதால், பொய்மையே வெல்லும் என்று சொல்ல வேண்டியுள்ளது.
1967ல் விலையேற்றம் மக்களை சிரமப்பட வைத்தது. அதனால்தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் சொன்னபோது, அண்ணா 'மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்ய வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையை விட்டுவிட வேண்டும்' என்றார்.
அந்த அண்ணாவின் பெயரில் கட்சியை நடத்தும் ஜெயலலிதா நாட்டு மக்களுக்கு என்ன தேவையோ அதில்தான் கவனம் செலுத்த வேண்டும். பொய் வழக்குகளை சந்திப்போம். வெற்றி பெறுவோம். அவர்களுக்காக உழைத்தோம். அதற்கு கிடைத்த பரிசுதான் இந்த பொய் வழக்குகள். அதை ஏற்கிறோம்.
மிடாஸ் மோகன் எங்களது உறவினர் என்று சொல்கிறார்கள் அவர் எங்களது உறவினர் அல்ல என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக