செவ்வாய், 20 மார்ச், 2012

நயன்தாராவின் காத்தாடி பறக்கத் தயாராக

நயன்தாரா மறுபடியும் நடிக்கப் போவதாகக் கூறியதும், பல இயக்குனர்களும், நடிகர்களும் தங்களது படத்தில் நடிக்க நயன்தாராவை நாடியது அனைவரும் அறிந்ததே. கடைசியாக நயன்தாரா ஒரு கதையை தேர்வு செய்துவிட்டார். 
தமிழில் ’ஜெயம்’ ரவி ஹீரோவாக நடித்த ஜெயம் படத்தில் வில்லனாக அறிமுகமான் கோபிசந்த் ஹீரோவாக நடிக்க தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கொட்டை ஆகிய படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இந்த படத்தை இயக்குகிறார். 
உத்தமபுத்திரன், ஒஸ்தி ஆகிய படங்களை இயக்கிய ஜெயபாலாஜி ரியல் மீடியா நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. அனைத்து வகை ரசிகர்களும் ரசிக்கக் கூடிய வகையில் சென்டிமெண்ட், கமர்ஷியல் கலந்த ஆக்‌ஷன் படமாக இருக்குமாம் இந்த பெயர் சூட்டப்படாத படம்.
கோபிசந்த் தெலுங்கில் 
 மிகப்பெரிய ஹீரோ. நயன்தாரா தெலுங்கில் அதிக படங்கள் நடித்திருந்தாலும் இதுவரை கோபிசந்துடன் இணைந்து நடிக்கவில்லை. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது தான். வேட்டை படத்தில் வில்லனாக நடித்த அஷ்ரத் ராணா உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். நயன்தாராவின் காத்தாடி பறக்கத் தயாராக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக