திங்கள், 12 மார்ச், 2012

ஒசாமா உல்லாசம் காட்டிக் கொடுத்த மூத்த மனைவி

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் ஒளிந்திருந்த இடத்தை அவரது மனைவிகளில் ஒருவர் தான் காட்டிக் கொடுத்துள்ளார். இதற்குக் காரணம், ஒசாமா தனது கடைசி மனைவி மட்டும் அதிக அன்பு காட்டி வந்ததாலும், அவருடன் மட்டும் நெருக்கமாக இருந்ததாலும்தான் என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு 5 மனைவிகள். ஒசாமா பாகிஸ்தானில் உள்ள அப்போத்தாபாத் வீட்டில் பதுங்கியிருந்த காலத்தில் 5 மனைவிகளில் இளையவரான அமல் அகமது அப்துல் பத்தாஹ் அல் சதாவுடன் மட்டுமே இரவு நேரத்தை உல்லாசமாக கழித்துள்ளார். அதேசமயம் அவரது மூத்த மனைவி கைரியா சபீர் தரை தளத்தில் உள்ள படுக்கை அறையில் தனியாகத்தான் தூங்கி வந்தாராம்.

தன்னைவிட்டுவிட்டு 'சதா', சதாவுடன் ஒசாமா இருந்தது கைரியாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட பொறாமை உணர்வால் அவர் தனது கணவர் பதுங்கியிருந்த இடத்தை காட்டிக் கொடுத்து விட்டார் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கைரியா சபீர் அல் கொய்தா அமைப்புக்கு பணியாற்றியிருக்கலாம் என்று ஒசாமாவை அமெரிக்கப்படைகள் கொன்றது குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற பாகிஸ்தானிய பிரிகேடியர் சௌகத் காதிர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக