வியாழன், 15 மார்ச், 2012

மதம் மாறி திருமணம் காதலன் படுகொலை, மயிலாப்பூர்

சென்னை மயிலாப்பூர் பிள்ளையார்கோயில் தோட்டம் பகுதியைச்சேர்ந்தவர் நிஜாமிதீன்.   இவருக்கு இரண்டு மகன்கள்.  முதல் மகன் அகமது பாட்ஷா, இரண்டாவது மகன் பிலால்.  கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு பிலாலுக்கும் அதே பகுதியைச்சேர்ந்த திவ்யா என்ற பென்ணுக்கும் காதல் திருமணம் நடந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திவ்யாவின் தந்தையும், பகுதி பாமக நிர்வாகியுமான மணிவண்ணன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று மயிலாப்பூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டார்.  இதனால் போலீசார் பிலாலின் அண்ணன் அகமதுபாட்ஷாவை அழைத்து சமரச பேச்சு
அப்போது எதிர்பாராதவிதமாக வாசலில் பாதுகாப்புக்காக நின்றிருந்த பாரா போலீசின் துப்பாக்கியில் உள்ள கத்தியை ஒரு கும்பல் பிடிங்கி
அகமதுபாட்ஷாவை சரமாரியாக குத்தியது. அவர் உயிர் பிழைத்தார்.
போலீஸ் நிலையத்திலேயே நடந்த இந்த சம்பவம் அனைவரையும் மிரளவைத்தது. 
இதற்கிடையில் திவ்யாவை திருமணம் செய்து
எதிர்ப்புகளால் தலைமறைவாக இருந்த பிலால், காவல்நிலையத்திற்கு வந்து சமரசம் பேசி திவ்யாவை அவருடைய பெற்றோரிடமே ஒப்படைத்துவிட்டார்.
அதன்பின் அவர் வேலைக்கு சென்றுவிட்டு, நேராக வீட்டுக்கு போய்விடுவாராம்.  இன்றிரவு 8 மணி அளவில் அபிராமபுரம் சிருங்கேரிமடம்
சாலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிலால் சடலமாக கிடந்தார்.
இந்த கொலையில் பிலாலின் காதல் மனைவி திவ்யாவின் உறவினர்கள் சம்பந்தப்பட்டிருப்பார்களா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக