வியாழன், 15 மார்ச், 2012

அதிமுகவினரின் கொலைவெறி தப்பிய நக்கீரன் போட்டோகிராஃபர்

கொலைசெய்யும் நோக்கில் சங்கில் ஏறி மிதித்த அதிமுகவினரிடம் இருந்து தப்பினார் நக்கீரன் போட்டோகிராஃபர் ராம்குமார்.
இடைத்தேர்தல் நடக்கும் சங்கரன்கோவில் தொகுதியில் லட்சுமி புரம் 5வது தெருவில் அமைச்சர் விஜய்யுடன் வந்த குழு ஒன்று இன்று (14.03.2012) காலை அந்த தெருவில் உள்ளவர்களுக்கு ஓட்டுக்காக பணப் பட்டுவாடா செய்வதற்கான டோக்கன் வழங்கிக்கொண்டிருந்தது.
அப்போது, அவர்களுக்குள் நெருக்கடி ஏற்படவே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனை நக்கீரன் போட்டோகிராஃபர் ராம்குமார் படம் எடுத்தபோது, அந்த குழுவில் உள்ள வர்கள் போட்டோகிராஃபரின் செல்போன் மற்றும் கேமராவை பறித்துக்கொண்டு சரமாரியாக தாக்கினார்கள். சுமார் 20 பேர் சூழ்ந்துகொண்டு தாக்கியதில், நெஞ்சு, கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளில் விழுந்த அடியால் பலத்த காயம் ஏற்பட்டது. காலில் செருப்பு, ஷூவால் மிதித்ததால் நகம் பிய்ந்தது.
பொதுமக்கள் சிலர் ஓடி வந்து போட்டோகிராஃபர் ராம்குமாரை மீட்டனர். ’ஒன்ன உசுரோட விட்டதே பெரிசு; இல்லேன்னா கொன்னு பொணத்ததான் அனுப்பியிருப்போம்’ என்று கொக்கரித்திருக்கிறது அந்தக்கும்பல்.
மீட்கப்பட்ட ராம்குமார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு, கழுத்தில் ஏறி மிதித்ததால் வலியால் அவதிப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக