செவ்வாய், 27 மார்ச், 2012

புதுச்சேரியில் மூடநம்பிக்கை முறியடிக்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி, மார்ச் 26-புதுச்சேரி திராவிடர் கழக துணைத் தலை வர்கள் சு.துளசிராமன், கதிர்காமம் ஆனந்தா நகரில் தாம் கட்டும் இல்லத்துக்கு தலை வாசல் கால் மூட நம்பிக்கையை முறிய டிக்கும் விதத்தில் அனை வரும் தெரிந்துகொள் ளும் வண்ணம், புதுச் சேரி திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலைமையில் பொது மக்கள் முன்னிலையில் கைம்பெண்களை வைத்து, ஆன்மீகவாதி களால் கெட்டநேரம் என்று சொல்லப்படு கின்ற 20.3.2012 செவ் வாய்க்கிழமை அன்று எமகண்ட நேரமான பகல் 12 மணி முதல் 1.30 மணி வரையிலான நேரத் தில் சரியாக பகல் 12.45 மணியளவில் வாசக்கால் பொருத்தப்பட்டது. நல்லநேரம் கெட்ட நேரம் என்று நம்புகின்ற மக்கள் அறிவு தெளிவு பெற வேண்டும் என்ப தற்காக பொதுமக்கள் அனைவரையும் வரவ ழைத்து தலவாசக்கால் வைக்கும் நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிகழ் வில் புதுச்சேரி திராவி டர் கழக பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, கழகத் தோழர்கள் வை. சண்முகம், இர.சத்தி யராஜ், ப.சுகுணா மற் றும் நண்பர்கள் உறவி னர்கள் கலந்துகொண் டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக