வியாழன், 29 மார்ச், 2012

ஜெயா சசி தோழிகளுக்கு எதுவுமே தெரியாதாமே?

மக்களை எல்லாம் மடையர்களாக மதிக்கும் இந்தம்மா ஆட்சியில் இது ஒன்றும் அதிசயமில்லை. என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் மடையர்கள் இருக்கும்வரை இதுக்கெல்லாம் விமோசனமே கிடையாது.
தினமலரின் அங்கலாய்ப்பை வாசியுங்கள் பார்ப்பானாம் கொக்காம் 
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை. அவை:
* கடந்த மூன்று மாதங்களாக பல செய்திகள் வெளிவருவதால், விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளதாக சசிகலா குறிப்பிட்டுள்ளார். சசிகலாவும் அவரது உறவினர்களும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது தான், செய்திகள் அதிகமாக வெளிவந்தன. அப்போது விளக்க அறிக்கை வெளியிடாமல், செய்திகள் ஓய்ந்த பின், மூன்று மாதங்கள் கழித்து இந்த விளக்கத்திற்கு என்ன அவசியம் வந்தது?

* போயஸ் கார்டனில் இருந்தவரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது ஓரளவுக்குத் தெரிந்ததே தவிர, முழு விவரமும் தெரியவில்லை என்கிறார். முதல்வருடன் நெருக்கமாக இருந்தவர் சசிகலா மட்டுமே. வெளியில் உள்ள உறவினர் ஒருவர் அனுப்பும் சிபாரிசு எப்படி, கார்டனுக்குள் நுழைந்து கனிந்தது?
* என் பெயரை பயன்படுத்தி கட்சிக்கு பாதிப்புகளை ஏற்படுத்தினர் என்கிறார். கட்சியில் மண்டலம் வாரியாக சசிகலாவின் உறவினர்கள் நியமிக்கப்பட்டது, அவர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டது, அவர்கள் சிபாரிசுகளில் கட்சிப் பதவிகள் கிடைத்தது எல்லாம், சசிகலாவுக்கு எப்படி தெரியாமல் போனது?

* கட்சிப் பதவிகள், தேர்தலின் போது, எம்.எல்.ஏ., சீட், எம்.பி., சீட், மந்திரி பதவிகள், இலாகா மாற்றங்கள் என, தொடர்கதையாக சசிகலா உறவினர்கள் செய்த சிபாரிசுகள் எண்ணிலடங்காதவை. இந்த விவரங்கள் தெரியாத, அ.தி.மு.க., வினரே இல்லை என்ற நிலையில், "எனக்கே தெரியாமல் நடந்தவை' என்ற வாதம் எப்படி பொருந்தும்?

* "அக்காவிற்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள் தான்' என்கிறார். "நடராஜன் உட்பட, சசிகலாவின் உறவினர்களுக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை' என்று, 25 ஆண்டுகளுக்கு மேலாக, அடிக்கடி ஜெயலலிதா பெயரில் அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அப்போதெல்லாம், அந்த அறிக்கைகளை கட்சியினர் யாரும் மதிப்பது கிடையாது. காரணம், எல்லாமே சசிகலா சொல்படி தான் நடக்கும் என, கட்சியினருக்குத் தெரியும். இப்போது சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையும், அதன் தொடர்ச்சி தான் என்பது கட்சியினருக்குத் தெரியாதா?

* "பதவிகளை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ, எனக்கு துளியும் ஆசையில்லை. பொதுவாழ்வில் பங்கு பெறும் விருப்பமே இல்லை' என்கிறார். அப்படியானால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான, அ.தி. மு.க.,வினர் உறுப்பினர் பொறுப்பிலும், பொதுக்குழு உறுப்பினர் அந்தஸ்திலும் இருந்தது ஏன்? பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்றது ஏன்?

* "எனக்கென வாழாமல், அக்காவுக்கு உதவியாக இருக்கவே விரும்புகிறேன்' என்கிறார். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த தலைவர்கள் யாரும், தங்கள் உறவினர்களுக்கு பதவி, பொறுப்பு, அதிகாரங்களை பெற்றுத் தந்ததில்லையே?

பெங்களூரு பறந்தார்: சென்னையில் இருந்து சசிகலா, இளவரசி மற்றும் சகாக்களுடன், நேற்றிரவு விமானத்தில் பெங்களூருவுக்கு பறந்தனர். நேற்று காலை அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா, போயஸ் கார்டனுக்குள் நுழைவார் என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில் சசிகலா, இளவரசி, அசோகன், தண்டபாணி, ராஜராஜன், மணிசங்கர் ஆகியோர் நேற்றிரவு 8 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து, விமானத்தில் பெங்களூருவுக்கு பறந்தனர். இன்று பெங்களூரு கோர்ட்டில் சசிகலா ஆஜர் ஆவார் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக