ஞாயிறு, 4 மார்ச், 2012

டெல்லியில் ஆப்கன் பெண் வருங்கால கணவனால் படுகொலை

திருமணம் செய்ய மறுத்த ஆப்கன் பெண் படுகொலை
நிச்சயம் செய்யப்பட்ட பின்னர் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த 22 வயது ஆப்கன் பெண்ணை அவரது வருங்காலக் கணவர் படுகொலை செய்தார். தெற்கு தில்லியில் உள்ள ஜங்புராவில் இந்த சம்பவம் நடந்தது.
பைமனா கஞ்சார் என்ற அந்தப் பெண் அமெரிக்காவில் படித்தவர். தில்லிக்கு கடந்த பிப்ரவரி 21 வந்த அவர் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
ரஷ்யாவில் படித்துவரும் உமைத் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உமைதை திருமணம் செய்துகொள்ள பைமனா கஞ்சார் மறுத்துவிட்டார்.
இதனால் கோபமடைந்த உமைத் அவரை கத்தியால் குத்தி படுகொலை செய்தார். இதையடுத்து உமைத் கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக