சனி, 17 மார்ச், 2012

குஷ்புவுக்கு கமல் தந்த இன்ப அதிர்ச்சி!

நடிகை குஷ்புவுக்கு, கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சில தினங்களுக்க முன்னர், நடிகை குஷ்பு வீட்டிற்கு போன் வந்திருக்கிறது. போனை எடுத்த குஷ்புவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, நான் கமல்ஹாசன் பேசுகிறேன். விஸ்வரூபம் சூட்டிங்கிற்கு கொஞ்ச வர முடியுமா என்று கமல் கேட்க, குஷ்புவும் கமலின் போன் அழைப்பை ஏற்று சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு குஷ்புவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அப்படி என்ன இன்ப அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா...?
இதோ குஷ்புவே சொல்கிறார் கேளுங்கள், நான் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற போது அங்கு கமல்ஹாசன் கதக் டான்ஸ் கற்றுக்கொண்டு இருந்தார். அவருக்கு பிரபல கதக் மாஸ்டர் பிர்ஜூ மகாராஜ், கதக் நடனம் சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்தார். எனக்கு கதக் டான்ஸ் தெரியும், அதுமட்டுமல்ல கதக் மாஸ்டர் பிர்ஜூ மகாராஜாவையும் ரொம்ப பிடிக்கும். அதன் காரணமாகத்தான் எனது நண்பர்(கமல்) எனக்கு போன் போட்டு விஸ்வரூபம் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வர வழைத்தார். சூட்டிங் ஸ்பாட்டில் பிர்ஜூ மகாராஜை பார்த்ததும் ரொம்ப ஆச்சர்யமாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. பின்னர் அவரை சந்தித்து சில நிமிடம் பேசினேன். பிர்ஜூவை சந்திக்கும் வாய்ப்‌பை ஏற்படுத்தி கொடுத்து, இன்ப அதிர்ச்சியளித்த கமல்ஹாசனுக்கு எனது நன்றி என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக