ஞாயிறு, 18 மார்ச், 2012

ராஜேந்தர்,பாக்யராஜ் பாதையில் விஜய் அரசியலுக்கு வரப் போ.....

விஜய் வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவரது மக்கள் இயக்கம் பற்றியும் மற்றும் எதிர்கால அரசியல் வருகை பற்றியும்கூறியுள்ளார்.அந்த பேட்டியில் விஜய் “ என்னுடைய ரசிகர் மன்றத்தை அப்பா மக்கள் இயக்கமாக மாற்றியமைத்துள்ளார்
கடலூர் மாவட்டத்தில் தானே புயல் வந்த போது மக்கள் இயக்கத்து சகோதரர்கள் மக்களுக்கு செய்த நற்பணிகள் பற்றி அனைவருக்கும் தெரியும். தென் மாவட்டத்தில் இருக்கும் இயக்கத்தினரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து பேசி வருகிறேன்.
மக்கள் இயக்கத்தை வலிமைப் படுத்தும் முயற்சியில் இருக்கிறோம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. உடனே எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப் போவதாக இந்த பதிலை வைத்து நீங்களே யூகம் பண்ணி எழுதிடாதீங்க்ணா.இப்போதைக்கு அரசியல் பற்றி எதுவும் பேச வேண்டாம் ப்ளீஸ்” என்று கூறியுள்ளார். 
மேலும் அவர் “நான் இயக்குனர் சொல்வதைத் தான் செய்கிறேன். நான் எதிலும் தலையிடுவதில்லை. புராஜெக்டுக்கு போவதற்கு முன்பே என்ன பண்ணலாம், எப்படி பண்ணலாம் என பேசிவிட்டு தான் செல்வோம். ரசிகர்கள் எதிர்பார்க்கும் தலைவரின் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கவே விரும்பிகிறேன்” என்று கூறியிருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக