வெள்ளி, 16 மார்ச், 2012

Aakash 2 tablet ஆகாஷ்-2 டேப்லெட் சிறப்பான துல்லியத்தினை கொடுக்கும்


அடுத்த மாதம் வெளியாகும் ஆகாஷ்-2 டேப்லட்!“ஆகாஷ் டேப்லெட்டின் மேம்படுத்தப்பட்ட மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது,”வாடிக்கையாளர்களின் மத்தியில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்திய உலகின் குறைந்த விலை டேப்லெட்டான ஆகாஷ் செயல்திறனில் சிறப்பாக இல்லை என்று கருத்து எழுந்துள்ளது. இந்த நிலையில், அதிவேக செயல்திறன் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக ஆகாஷ் மாற்றப்பட்டுள்ளது.
ஆகாஷ்-2 என்ற பெயரில் இந்த டேப்லட் வருகிறது. இந்த நிலையில், ஆகாஷ்-2 டேப்லெட் அடுத்த மாதம் வெளியிடப்பட இருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.
புதிய ஆகாஷ்-2 டேப்லெட் சிறப்பான துல்லியத்தினை கொடுக்கும் திரையினையும், நீடித்து உழைக்கும் பேட்டரியினையும் கொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதி வேகத்தில் இயங்க 700 மெகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
அதோடு 3,200 எம்ஏச் பேட்டரியும் இதில் உள்ளது. அதிக ப்ரீ ஆர்டர்களை பெற்று வரும் இந்த டேப்லட், வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர் பார்க்கப்பட்டு வருகிறது.
ஆகாஷ் 1 டேப்லட்டை விட ஆகாஷ்-2 டேப்லட் விலை அதிகமானதாக இருக்கும் என்ற ஒரு கருத்தும் நிலவி வந்தது. மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபில் ஆகாஷ்-2 டேப்லட்டும், ஆகாஷ்-1 டேப்லட்டின் ஒரே விலை கொண்டதாகத்தான் இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.
இதனால், வாடிக்கையாளர் மத்தியில் ஆகாஷ்-2 டேப்லட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆகாஷ் டேப்லெட் ரூ.2,400 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, ஆகாஷ்2 டேப்லெட்டும் இதே விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக