சனி, 25 பிப்ரவரி, 2012

சோ Encounter .ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோ ஆட்டோ சங்கரோ


சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேர்களும் நல்லவர்களோ, நாட்டுக்காக உழைத்தவர்களோ அல்ல திருடர்கள் அதனால் இந்த என்கவுன்டர் தவறானது இல்லை, தமிழக அரசு மீது தேவையில்லாமல் அவதூறு செய்கிறாரகள் என்று பத்திரிகையாளர் சோ குறிப்பிட்டிருக்கிறாரே,
-கி. சரவணன்.
கொள்ளை, கொலை எதுவாக இருந்தாலும் உரிய முறையில் விசாரித்து தண்டனை தரவேண்டும் என்பதற்காகத்தான் நீதி மன்றம்.
வங்கி கொள்ளைக்கே என்கவுன்டர் செய்யவேண்டும் என்று சொல்கிற நடிகர் சோ, ‘சங்கரராமனை கொலை செய்த, ஜெயேந்திர சரஸ்வதியை ஏன் தேவையில்லாமல் விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள், அவரையும் என்கவுன்டரில் போட்டு இருக்கலாமே.
அன்றைக்கே அவரை என்கவுன்டரில் போட்டிருந்தால், இன்றைக்கு அவர் சாட்சிகளை களைப்பது, நீதிபதியிடமே பேரம் பேசுவது போன்ற செயல்களை செய்திருப்பாரா?’ என்று கேட்பார் போல் தெரிகிறது. சோ இப்படி கேட்டால் அது நியாயம் இல்லை.
நம்மை பொறுத்தவரை அது ஆட்டோ சங்கரோ, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோ கொலை, கொள்ளை செய்த யாரையும் என்கவுன்டரில் சுட்டு சாகடிக்கக் கூடாது.
முறைப்படி விசாரித்துதான் தண்டனை தரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக