வியாழன், 23 பிப்ரவரி, 2012

Encounter சென்னையில் நள்ளிரவில் 5 வட மாநில வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

சென்னையி்ல் இரு இடங்களில் நடந்த வங்கி்க்கொள்ளையில் தொடர்புடைய வடமாநிலத்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். போலீசாருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாயினர்.
சென்னையில், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில், 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி பேட்டியளித்தார்.
இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌நள்ளிரவில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

இதை அறித்த கொள்ளயைர்கள் தப்பியோட நினைத்துள்ளதாக கூறப்படுகிது. அப்போது போலீசார் து்ப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதில் 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. நள்ளிரவு 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இரு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கமிஷனர் திரிபாதி விரைவு: சம்பவம் நடந்த இட‌த்தை உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். காயமடைந்த இரு எஸ்.ஐ.க்களை ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு சென்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி , நேரில் சென்று ஆறுதல் கூறினார்..

வடமாநிலத்தவர்கள்: துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரி்த்து வருகின்றனர் , சம்பவம் குறித்த தகவல் வெளியான உடன் பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.
மேலும் பலியானவர்கள் யார் என்ற விபரம் விசாரணையில் தெரியவரும்‌. எனினும் வடமாநிலத்தவர்கள் என கமிஷனர் திரிபாதி கூறினார்.நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக