செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

போஜ்புரி நடிகை தற்கொலை: நண்பர் கைது

போஜ்புரி படங்களில் நடித்து வந்த ரூபி சிங் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது நெருங்கிய நண்பர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பீகாரைச் சேர்ந்தவர் நடிகை ரூபி சிங்(25). போஜ்புரி படங்களில் நடித்து வந்தார். அவரது பெற்றோர் பாட்னாவில் வசித்து வருகின்றனர். அவர் மட்டும் மும்பையை அடுத்த கோரேகான் புறநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் சாகும் முன்பு இந்தியில் எழுதி வைத்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். ரூபியின் பெற்றோரிடம் விசாரித்தனர்.

ரூபி வீட்டுக்கு அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் சென்றுள்ளார். கதவைத் தட்டியும் அவர் திறக்காததால் அந்த நண்பர் கதைவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரூபி பிணமாகத் தொங்கினார் என்று அவரது தந்தை பாட்டில் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த நண்பரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக