சனி, 4 பிப்ரவரி, 2012

சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி சிபிஐ நீதிமன்றத்தில்


Subramanya Swamy
டெல்லி: சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டாலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போகிறேன், என்று வழக்கு மேல் வழக்கு போட்டு அரசை மிரட்டிக் கொண்டிருக்கும் சுப்பிரமணிய சாமி.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்து உரிமம் வழங்கப்பட்டபோது ஆ. ராசா செய்த தவறுகளை ப. சிதம்பரம் தடுத்து நிறுத்தி இருக்கவேண்டும். அந்த கடமையில் தவறி விட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்தார்.அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிப்பதாக சுப்பிரமணியசாமி கூறியிருந்தார். ஆனால் அவற்றை நீதிமன்றம் ஏற்கவில்லை. அந்த ஆதாரங்கள் வழக்கு போட போதுமானவையாக இல்லை என்று கூறி மனுவை நிராகரித்தது நீதிமன்றம்.

நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகு சுப்பிரமணிய சாமி அதுபற்றிக் கூறுகையில், "சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பு எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நான் மேல் முறையீடு (அப்பீல்) செய்வேன். சிபிஐ நீதிமன்ற தீர்ப்பால் நான் ஏமாற்றம் அடைய வில்லை. மேல் முறையீட்டில் தீர்ப்பு மாறும் என்று உறுதியாக நம்புகிறேன்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக