சனி, 25 பிப்ரவரி, 2012

ரசிகர்கள் கொலவெறி - ஹன்சிகா ஆவேசம்!

சில நாட்களுக்கு முன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியின் விழாவிற்கு சென்றிருந்தார் ஹன்சிகா மோத்வானி. விழாவை சீரும் சிறப்புமாக நடத்திவிட்டு விழா முடிந்ததும் கிளம்பியிருக்கிறார். விழாவிற்கு வரும்போது இருந்த கவனிப்பு கிளம்பும் போது இல்லையாம்.
கோபத்தோடு வெளியே வந்து பார்த்த ஹன்சிகாவிற்கு தலைசுற்றிவிட்டது. கிட்டத்தட்ட ஆயிரம் ரசிகர்கள் ஹன்சிகாவைக் காண திரண்டுவிட்டார்களாம். அவர்களை கடந்துசெல்ல முயன்ற ஹன்சிகா ரசிகர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டுவிட்டார்.
கூட்டத்தில் மூச்சுத் திணறிய ஹன்சிகாவை போலிஸார் காபாற்றுவதற்குள் பல ரசிகர்கள் ஹன்சிகாவை தொட்டுப் பார்க்கும் ஆசையை தீர்த்துக் கொண்டுவிட்டார்களாம். 
சில ரசிகர்கள் சந்தோஷத்தில் செய்வதறியாமல் ஹன்சிகாவின் உடலில் நகக் கீறல்களை போட்டு விட்டார்கள். ஒரு வேளையாக போலீஸார் கடும் முயற்சியால் ஹன்சிகாவை மீட்டெடுப்பதற்குள் ஹன்சிகா பல காயங்களுக்கு ஆளாகிவிட்டிருந்தார்.இது பற்றி பேட்டியளித்த ஹன்சிகா “ ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டனர். அவர்களிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை. இனி செக்யூரிட்டி இருந்தால் தான் எங்கும் செல்வேன். அன்று போலீஸ் இல்லையென்றால் என் கதி அவ்வளவு தான்” என்று கூறியிருக்கிறார்.போன முறை சென்னையில் இது போல் நடந்த போதே உஷாராகியிருக்கலாம் என்கின்றனர் சென்னை ரசிகர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக