புதன், 8 பிப்ரவரி, 2012

பத்மபூஷன் எப்படி கிடைத்தது?

குடியரசு தினத்திற்கு முன் தினம் பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். சமீப காலமாக, இந்த விருதுகள் வழங்குவதிலும், அரசியல் மற்றும் சிபாரிசுகள் நுழைந்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நாட்டிற்கு சேவை செய்தவர்களுக்கு, இந்த விருதுகள் கிடைத்தாலும் சிலர் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்தாண்டு, பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரபல இந்தி நடிகரும், ஹேமாமாலினியின் கணவருமான தர்மேந்திராவிற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. தர்மேந்திரா, பா.ஜ.,வில் பஞ்சாபிலிருந்து எம்.பி.,யாக இருந்தவர். அவரது மனைவி ஹேமாமாலினியும், தற்போது பா.ஜ.,வில் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். எப்படி தர்மேந்திராவிற்கு விருது கிடைத்தது? ஹேமாமாலினியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ராஜ்யசபா உறுப்பினர்கள். பிரதமரைச் சந்தித்தார்
ஹேமா. "என் கணவர் தர்மேந்திரா சினிமா உலகத்திற்காக, பெரும் தொண்டாற்றியுள்ளார். அவர் பா.ஜ.,வில் இருந்தாலும், பா.ஜ., ஆட்சியில் இருந்த போது அவருக்கு எதுவும் செய்யவில்லை. என்னுடைய ராஜ்யசபா பதவிக்காலமும் முடியப்போகிறது மீண்டும் எம்.பி., பதவி, கட்சி தருமா என்பது சந்தேகம் தான். எனவே, தர்மேந்திராவிற்கு பத்ம விருது தர, நீங்கள் உதவ வேண்டும்' என்று வேண்டுகோள் வைத்தார் ஹேமா. இதற்கு உடனடி பலன் கிடைத்துவிட்டது. கணவருக்காக, எதையும் செய்வாள் தமிழ் பெண்மணி என்பதை ஹேமாமாலினி நிரூபித்துவிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக