சனி, 18 பிப்ரவரி, 2012

கட்சி நிதி??? பெரும்பகுதி ராவணனின் பாக்கெட் டுக்குப் போய்விட்டதாம்

ராவணன் மீது ஒவ்வொரு நாளும் ஒரு புது கேஸ் போட்டுத் தாளிக்கிறது காவல்துறை. இதுவரை நடந்த விசாரணையில் தான் சேர்த்த சொத்துக்கள் குறித்த விவரங்கள் அனைத்தையும் ஒரு வரிகூட விடாமல் கக்கிவிட்டாராம் ராவணன். இருந்தும் தொடர்கின்றன வழக்கு அம்புகள்.
கடந்த ஏழு மாதங்களில் சசிகலா உறவுகள் அத்துமீறி ஆடிவிட்டார்களாம். குறிப்பாக, தான் ரொம்பவும் நம்பிய ராவணன் சந்துபொந்துகள் எல்லாவற்றையும் வளைத்துப் போட்டிருக்கிறார் என்பதை அறிந்து முகம் சிவந்துவிட்டாராம் முதல்வர். ஆகவேதான் வழக்குச் சாட்டை சொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறதாம். ‘ராவணனின் பினாமிகள் குறித்த எல்லா விவரங்களையும் தோண்டியெடுங்கள்’ என உளவுத் துறைக்கு உத்தரவு போட்டிருக்கிறதாம் தலைமை..’’
தேர்தலில் கட்சிப் பிரமுகர்களுக்கு டிக்கெட் கொடுக்கும் வகையில் கட்சி நிதிக்கு வந்து சேரவேண்டியதில் பெரும்பகுதி ராவணனின் பாக்கெட் டுக்குப் போய்விட்டதாம். ஏகப்பட்ட தொழில்களில் மூலதனத்தைப் போட்டதோடு, ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாஅமைந்திருக்கும் அதே பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலத்தையும் வளைத்துப் போட்டிருக்கிறாராம் ராவணன். கட்சிப் பிரமுகர்களுக்கு இதெல்லாம் தெரிந்தும், ‘தலையாட்ட முடியாது, வாலையாவது ஆட்டுவோம்’ என்று ராவணனுக்கு சல்யூட் கொடுத்தார்களாம்.’’
‘‘என்ன சுவாமி..!’’ வாயைப் பிளந்தார் சிஷ்யை.
‘‘இதையெல்லாம்விட சில பகீர் விஷயங்களைக் கேட்டு நானே தலைசுற்றி விட்டேன்..’’ என்ற வம்பானந்தா, ‘‘ராவணனை தனது இரும்புக் கையில் வைத்துக்கொண்டு அவரிடம் விசாரித்த ஓர் அதிகாரி, ‘ஏன் சார் முதல்வரம்மா உங்களை மட்டும் கண்கொத்திப் பாம்பாக விரட்டுகிறார்களே?’ என ஒரு ‘பிட்’டைப் போட்டிருக்கிறார். அத ன்பிறகுதான் ராவணன், மகுடிக்கு தலையசைத்து பல விஷயங்களைக் கக்கியிருக்கிறாராம்..’’
‘‘என்ன என்ன?’’
‘‘சொல்கிறேன்.. ‘சார், எப்போதும் எனக்கும் திவாகரனுக்கும் ஒத்துவராது. அந்த நிலையில், பெங்களூருவில் நடக்கும் அம்மாவின் சொத்துக் குவிப்பு வழக்கை சிலர் சரியாக நடத்தவில்லை என்பதுதான் அம்மாவுக்கு ரொம்பக் கடுப்பு. நிச்சயமாக அந்தத் தப்பை நான் செய்யவில்லை. அதைச் செய்தது எல்லாம் திவாகரன்தான். எப்படியும் இந்த வழக்கில் அம்மா தண்டிக்கப்படுவார். அந்த கேப்பில், அம்மா இடத்தை தான் கைப்பற்ற வேண்டும் என திவாகரன் தவறான ஆதாரங்களாகக் கொடுத்தார். அந்தச் சமயத் தில் சசிகலா அம்மாவுக்கும் உடல்நிலை சரியில்லை.. இதையெல்லாம் யூஸ் பண்ணிக் கொண்டார் திவாகரன். அவரோட ஒரே நோக்கம் ‘பெரிய பதவி’தான்...’ என்று ராவணன் சொன்னதும் அதிகாரி, ‘உங்களுக்கு எல்லாம் தெரிந்தும் அதை ஏன் முதல்வரிடம் சொல்லவில்லை?’ என்று கேட்டாராம்..’’
‘‘அதற்கு ராவணன் என்ன சொன்னார்?’’
‘‘பலவீனம்தான் சார்... அதற்கு சரியான சந்தர்ப்பம் வந்தும்கூட நான் செய்யவில்லை.. அவ்வளவு மரியாதை வைத்திருந்தார் அம்மா. கார்டனுக்கு நான் போய்விட்டுக் கிளம்பும்போது ‘சாப்பிட்டுவிட்டுப் போங்க’ என்றுதான் அவங்க சொல்வாங்க. அவங்ககிட்ட எனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லாமல் இருக்கிறேனே என்ற உறுத்தல் இ ருந்துகொண்டே இருந்தது. குறைந்தபட்சம் கடைசி நேரத்தில் சொல்லியிருந்தால்கூட தப்பித்திருப்பேன்..’ என முகத்தைப் பொத்திக்கொண்டாராம்..’’
‘‘அடடா...’’
‘‘இந்த விசாரனை ஒரு பக்கம் இருக்க, பெண்கள் விஷயத்தில் வில்லங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் பற்றியும் நிறைய புகார்கள் வருகிறதாம். இது ஆளும் கட்சித் தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.’’

‘‘யார் அந்த அமைச்சர்கள்...?’’

‘‘இப்போதைக்கு பெயர் வேண்டாம். அந்த அமைச்சர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கிறார்களாம். அவர்கள் திருந்தவில்லையென்றால் நடவடிக்கைகளில் சிக்கு வார்கள்’’ எனச் சொல்லி முடித்த வம்பானந்தா, மேலும் சில துணுக்குச் செய்திகளை சிஷ்யையிடம் காட்டிவிட்டு குடிலுக்குள் கிளம்பினார்.
கடந்த 15-ம் தேதி, அதிகாரிகள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவை தமிழ்நாடு காவல்துறை உயர் பயிற்சியகம் சென்னை ஊனமாஞ்சேரியில் நடத்தியது. அதில் கலந் துகொண்டார் முதல்வர் ஷெயலலிதா. இந்த விழாவுக்காக அரசு அலுவலகங்கள் மற்றும் பத்திரிகை அலுவலகங்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. அதைப் பார்த்த அனைவருக்கும் கடும் அதிர்ச்சி. காரணம், அந்த அழைப்பிதழில், காவல்துறை அணிவகுப்புக்கு சல்யூட் அடித்தபடி முதல்வர் நிற்க, அவருக்குப் பின்னால் தி.மு.க. கொடிகள் பட்டொளி வீசிக்கொண்டிருந்தன.

எப்படி இது நடந்தது? விசாரித்ததில், ஏற்கெனவே தி.மு.க. ஆட்சியில் நடந்த விழாவில் அச்சிடப்பட்டிருந்த கருணாநிதியின் புகைப்படத்தைக் கத்தரித்துவிட்டு அங்கு ஷெயலலிதாவின் படத்தைப் பொருத்தியிருக்கிறார்கள். அதனால்தான், பின்னணியில் தி.மு.க. கொடிகள் பறந்திருக்கின்றன! இதைக்கூட கவனிக்காமல் இருக்கிறார்களே என காவல்துறை முணுமுணுக்கிறது.

ராசாவைத் தேடி...
பொன்முடியும் ஏ.வ.வேலுவும், கடந்த வாரம் இரண்டு முறை டெல்லி போனார்கள். அதே போல செவ்வாயன்றும் அவர்கள் டெல்லி போனார்கள். கையில் இரண்டு ஃபை ல்கள் வேறு இருந்தது. பாட்டியாலா கோர்ட்டுக்குப் போன அவர்கள் அங்கு ஆ. ராசாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அதன் பின்னர் மாலையில் திகார் சிறைக்குப் போயும் பேசியிருக்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் எங்கே போனார்கள் என்பது தெரியவில்லையாம். இதனால் தமிழக உளவுத்துறையும், மத்திய உளவுத்துறையும் அவர்கள் இருவரும் எதற்காக வந்தார்கள் என்று தோண்டித் துருவியதாம்.

ராசா தரப்பில் பேசியபோது, ‘ஒரு எம்.பி. வருடத்தில் மூன்று முறை நாடாளுமன்றத்தில் கையெழுத்துப் போட வேண்டும். இல்லையென்றால் அவரது பதவி பறிக்கப்படும். அதனால் அது நடந்துவிடக் கூடாது என்றுதான், இருவரும் ஆ. ராசாவைச் சந்தித்து, ‘ஸ்பெஷல் பர்மிஷன் கேட்டு நாடாளுமன்றத்துக்குச் செல்லுங்கள்’ என கேட்டுக் கொண்டார்கள். ஆனால் ராசா முடியாது என பிடிவாதமாகச் சொல்லிவிட்டார்’ என்று சொன்னார்களாம்.

அந்த ஃபைல்கள் எதற்கு என்று கேட்க, பொன்முடியின் கல்லூரிக்கான அங்கீகாரம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டதாகவும், அது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கழக அதிகாரிகளிடம் கொடுக்க கொண்டு வந்தவைதான் அந்த ஃபைல்கள் என்பதும் தெரிய வந்ததாம். அதன் பின்னர்தான் உளவுத்துறை அதிகாரிகள் நிம்மதிப் பெரு மூச்சுவிட்டார்களாம்.
இன்னொரு கூட்டணி!
அடுத்த தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறதாம் காங்கிரஸ். இந்த சலசலப்பில், மற்றொரு கூட்டணியைப் பற்றியே எல்லோரும் பரபரப்பாகப் பேசுகிறார்கள். எம். நடராஷனும் ஸ்டாலினும் ரகசியமாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார்களாம். அதே நேரத்தில் தயாநிதி மாறனுடனும் எம்.என். தரப்பு பேச்சு நடத்துகிறதாம்.

மாட்டிக்கொண்ட ஜனாதிபதி மகன்!
தேர்தலின்போது வாக்காளர்களுக்குக் கொடுப் பதற்காகக் கொண்டு செல்லப்படும் கோடிக்கணக்கான பணத்தை தேர்தல் கமிஜன் கைப்பற்றுவது சகஷமாகிவிட்டது. இந்நிலையில் ஷனாதிபதியின் மகன் ராஷேந்திர ஜெகாவத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாயை தேர்தல் கமிஜன் கைப்பற்றி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான இவர், ‘‘காங்கிரஸ் கட்சியின் ஏழை வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவை சந்திப்பதற்காக இந்தப் பணத்தை எடுத்துச் சென்றேன்’’ என்கிறாராம்.

அடுத்த வாரிசு!
சென்னை அடையாறில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப் போட்டியில், தஞ்சை பெரிய கோயில் பற்றி மாணவர் ஒருவர் பேசிய பேச்சு அரங்கத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்ததாம்.

பரிசளிப்பு விழாவின் போது சிறப்பு விருந்தினர், ‘எதிர்காலத்தில் பெரியாளாக வருவாய்...’ என்று மனம் திறந்து பாராட்டினாராம். அந்த மாணவன் வேறு யாரும் அல்ல... கருணாநிதியின் பேரன் ஆதித்யா. கனிமொழியின் மகன். பேச்சுப்போட்டி பயிற்சியின் போது பேரன் தாத்தாவிடம் பேசிக் காட்டினானாம். அவன் பேச்சைக் கேட்டு மெய்மறந்த தாத்தா, ‘இந்த வயதில் நான் கூட இப்படிப் பேசியதில்லை. என்னமா பேசுகிறான்’ என்று பாராட்டினாராம்.
ராவணனின் பினாமிகள் பட்டியலும் வேகமாக ரெடியாகி வருகிறதாம்.
தி.மு.க அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்புகளைப்பற்றி விசாரிப்பதற்காக வரும் பட்ஜெட் கூட்டத்தில் தனி நீதிமன்றம் அமைக்கும் அறிவிப்பை வெளியிடுவாராம் முதல்வர்.
ராவணனுக்கு கொடநாட்டில் நூறு ஏக்கர் நிலம் இருக்கிறதாம்!
thanks kumudam + thambidurai madhurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக