ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

ஜெ.வின் கையெழுத்தைப்போல் பல ஆவணங்களில் போட்டது எப்படி

சசி தரப்பை கார்டனில் இருந்து துரத்திய ஜெ.வின் கோபம், முதலில் அக்கினி வளையமாகப் பாய்ந்திருப்பது திவாகரன் மீதும் ராவணன் மீதும்தான். போலீஸுக்குத் தண்ணிகாட்டி வந்த ராவணனை, ""சரண்டராகாவிட்டால் உங்கள் ஒரே மகனை எங்கள் கஸ்டடிக்குத் தூக்கவேண்டியிருக்கும்'' என மிரட்டியே சரண்டராக வைத்தனர்.
இதேபோல் தங்களோடு கண்ணாமூச்சி ஆட்டம் நடத்திவந்த திவாகரனை சரணடைய வைக்க, அவரது குடும்பத்தினரை விசாரணைக்கு இழுத்தனர். தனது மனைவி ஹேமலதாவை நீடாமங்கலம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து அவர்கள் விசாரிப்பதைக் கண்டு வெலவெலத்துப்போன திவாகரனும் சரணடைய, திருச்சி மத்திய சிறையில் கொண்டுபோய் அடைத்து விட்டனர். சிறையில் திவாகரனை அதிகாரிகள் எப்படி நடத்துகிறார்கள்? ""சார்... அறையிலேயே முடங்கிக் கிடக்காம சிறைக்குள்ளேயே இருக்கும் கோயில்களுக்குப் போய்ட்டு வாங்க. யோகா பண்ணுங்க அமைதி கிடைக்கும்'' என்றெல்லாம் அவர்கள்தான் அவரை உற்சாக நிலைக்குக் கொண்டு வந்தனர்’ என்கிறது சிறைத்தரப்பே.

அதே சமயம் ரிஷியூர் வீட்டை இடித்த வழக்கில் ஜாமீன் கேட்கும் மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வர இருந்த நிலையில் எடையூர்க் காரரான சரவணன் என்பவரிடம் இருந்து, ஒரு லட்சத்தை மிரட்டிப் பறித்ததாக மற்றொரு வழக்கைப் பதிவு பண்ணியிருக்கிறார்கள் காக்கிகள். ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் சிக்னல் தரும்வரை ஏதாவது ஒரு வழக்கைப்போட்டு அவரை உள்ளேயே வைத்திருக்க வேண்டும் என்பது வந்திருக்கும் உத்தரவாம். அது என்ன ஒரு லட்ச ரூபாய் பறித்த வழக்கு?

நாகை அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக இருக்கும் எடையூரைச் சேர்ந்த சரவணன் என்பவர், ""ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த என் கொழுந்தியாள் மகளான யாழினி என்பவர் என் வீட்டில் தங்கியிருந்து திவாகரனின் செங்கமலத் தாயார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஒருவரோடு காதல் கொண்டு கல்லூரியில் இருந்து எஸ்கேப் ஆனார். அந்தப் பெண்ணால் தனது கல்லூரிக்குக் கெட்டபெயர் என கொதித்துப்போன திவாகரன், என்னைத் தூக்கிவரச் செய்தார். தன் ஆட்களோடு கத்தியைக் காட்டி மிரட்டி என்னிடமிருந்து ஒரு லட்ச ரூபாயை பறித்துக்கொண் டார்''’என்றுதான் ஒரு புகாரைப் பதிவு செய்துள்ளனர். இந்தப் புகாரில் எந்த அளவிற்கு உண்மை?

""அட நீங்க வேற. திவாகரனைத்தேடி அவர் காலேஜுக்குப் போனப்ப, சின்னதா நடத்திய ரெய்டில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில் ஒரு லட்சம் போக மீதம் ஒரு லட்சத்தை பிறகு தருகிறேன் என சரவணன் என்பவர் எழுதியிருந்தார். யார் இந்த சரவணன்? எதற்காக இவர் பணம் கொடுக்கவேண்டும்? என அவரைத் தேடிப்பிடித்தோம். சரவணனோ லவ் பண்ணி ஓடிப்போன எங்க யாழினி, கல்லூரியில் இருந்து 2 லட்ச ரூபாயைத் திருடிக்கிட்டுப் போய்ட்டதா திவாகரன் தரப்பு பொய்ப் புகார் கொடுத்தது. இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் டீம்தான் என்னைத் தூக்கிவந்து திவாகரன் தரப்பு முன் நிறுத்தியது. அவங்க ஒரு லட்ச ரூபாயை மிரட்டி வாங்கிக்கிட்டு மிச்சத்தை பிறகு தர்றதா என்கிட்ட எழுதி வாங்கிக்கிட்டாங்கன்னு சொன்னார். இது போதாதா? அவரைத் தூக்கி வந்து புகாரை எழுதி வாங்கிட்டோம்''’என்றார்கள் ஒரு சில காக்கிகளே. இந்த வழக்கில் திருத்துறைப்பூண்டி நடுவர் நீதிமன்றத்துக்கு 9-ஆம் தேதி மாலை 6.55-க்கு நீதிபதி ஹஜீம் முன் திவாகரனை ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினார் நீதிபதி. இப்படி மிரட்டல் வழக்கு ஒரு பக்கம் திவாகரனைக் குறிவைத்துப் போய்க்கொண்டிருக்க..

இன்னொரு பக்கம், கோவை காண்ட்டிராக்டர் ரவி குமாரை மிரட்டி 10 லட்சம் பறித்த விவகாரத்தில் ராவணனைக் கைது செய்த போலீஸ், திருப்பூர் கிருஷ்ணமூர்த்தி என்பருக்கு மணல் குவாரி வாங்கிக் கொடுப்பதாகச்சொல்லி அவரிடம் ஒரு கோடி ரூபாயை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்ற ரீதியில் வந்த புகாரின் அடிப்படையிலான வழக்கில், 2 நாள் கஸ்டடியில் வைத்து காக்கிகள் விசாரித்தனர். பின்னர் தொய்ந்துபோன நிலையில் ராவணனை மீண்டும் புழல் சிறையில் 8-ந் தேதி மாலை 4 மணியளவில் கொண்டுபோய் அடைத்தனர்.

விசாரணையில் என்ன நடந்தது? ராவணன் அப்போது கொடுத்த வாக்குமூலம்தான் என்ன? என விசாரணை டீம் வட்டாரத்திலேயே துருவினோம். ""சி.பி.சி.ஐடி. அலுவலகத்தின் குடோனுக்குள் ஒரு ஸ்டூலில் அவரை உட்காரவைத்து ஐந்து ஐந்து பேர் கொண்ட 10 டீம் மாறி மாறி விசாரித்தது. அவரை ஒரு நிமிடம் கூட தூங்க விடவில்லை. ""வருங்கால சி.எம்.என்று பலரிடமும், எந்த அடிப்படையில் சொன்னீங்க? எம்.என். இதற்கு எந்த அளவிற்கு சப்போர்ட்டாக இருந்தார்? எப்போதும் உங்கள் பின்னால் இருப்போம் என பல எம்.எல்.ஏ.க்களிடம் எந்த நோக்கத்தில் கடிதம் வாங்கினீர்கள்? என்று கேட்கப் பட்டபோது, ""எனக்கு எதுவும் தெரியாது. சசிகலாவும் எம்.என்.னும் சொன்னதை மட்டுமே செய்தேன்'' என்று சொன்னாராம் ராவணன். ஜெ.வின் கையெழுத்தைப்போல் பல ஆவணங்களில் போட்டது எப்படி? அதேபோல் போட்டுக் காட்டச் சொன்னபோது, அச்சு அசலாகப் போட்டுக் காட்டி விட்டு, இதுவும் சசிகலாவின் உத்தரவுப்படிதான் என்றாராம். கேள்விகளைத் தாக்குப் பிடிக்க முடியாத அவருக்கு பிரஷர் எகிறிப்போய் அவர் மயங்க, மருத்துவமனைக்குக் கொண்டுபோனோம். அவரிடம் கறந்த தகவல்கள் அப்படியே மேலிடத்திற்கு பாஸ் செயப்பட்டி ருக்கிறது. ராவணன் மீது அதிர வைக்கும் இன்னொரு வழக்கைப் போடலாமா? என்ற டிஸ்கஷனும் நடந்துகொண்டிருக் கிறது''’என்றனர் கிசுகிசுப்பாக.

-பகத்சிங், சேதுராமன், செல்வகுமார்
thanks nakkeeran+raj trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக