சனி, 25 பிப்ரவரி, 2012

சாமியாருடன் பெண் ஓட்டம் ; வெளிநாட்டு கணவர் அதிர்ச்சி

பரங்கிப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (40). இவர் வெளி நாட்டில் வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி விஜயலட்சுமி (35). இவர் அடிக்கடி பரங்கிப்பேட்டை அருகே உள்ள பள்ளி வாசல் தெருவில் குறி சொல்லும் சாமியார் தாமரைச்செல்வனிடம் சென்று குறி கேட்டு வந்தார்.
குறி கேட்பதற்காக அடிக்கடி சென்று வந்த விஜயலட்சுமிக்கும், சாமியார் தாமரைச்செல்வனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு முதல் விஜயலட்சுமியையும், சாமியார் தாமரைச் செல்வனையும் காணவில்லை. இருவரும் ஊரை விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த சுப்பிரமணியன், தனது மனைவியையும், சாமியாரையும் தேடி உள்ளார். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சுப்பிரமணியன் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குறி கேட்க சென்ற பெண், சாமியாரோடு காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக