ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

அமலாபாலின் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு

ஒரே நேரத்தில் எனது இரண்டு படங்கள் திரையிடப்பட்டுள்ளன என்று மிக மகிழ்ச்சியாகவும், அதே நேரம் சற்று கலக்கத்துடன் நம்மிடம் தெரிவித்தார் நடிகை அமலா பால்.மைனா படத்தில் அறிமுகமாகி, தெய்வத் திருமகள் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகை அமலா பால், நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள் மற்றும் காதலில் சொதப்புவது எப்படி என இரண்டு படங்கள் வெள்ளிக்கிழமையன்று திரைக்கு வந்துள்ளன. இரண்டு படங்களுமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் ஆதவாவுடனும், காதலில் சொதப்புவது எப்படி படத்தில் சித்தார்த்துடனும் இணை சேர்ந்துள்ளார் அமலா பால். இரண்டு படங்களுமே காதலை அடிப்படையாக வைத்த படங்கள்தான். ஆனால் நிச்சயமாக இரண்டு கதைகளும் வெவ்வேறான கதைக் கருவைக் கொண்டிருக்கும். நிச்சயமாக தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் அமலா பால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக