புதன், 15 பிப்ரவரி, 2012

ஆச்சார்யா: அது நிச்சயமாக பொய் வழக்கு. அந்த வழக்கை எதற்காகப்

காவிரி நீர் டிரிப்யூனலில் கர்நாடக அரசு சார்பாக வாதாடுபவர். பத்ராவதி கிருஷ்ணா கொலை வழக்கு, கோலார் ஹன் சிகோலே கொலை வழக்கு என கர்நாடகாவின் புகழ் வாய்ந்த வழக்குகளை நடத்தியவர்.
ஐந்து முறை அட்வகேட் ஜெனரலாகப் பதவி வகித்தவர். சில நாட்களுக்கு முன்பு வரை அதே பதவியை வகித்தவர். கூடவே, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா போன்றவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தும் அரசு சிறப்பு வழக்கறிஞர். 78 வயதான மூத்த வழக்கறிஞரான ஆச்சார்யா, சமீபத்தில் தனது அட்வகேட் ஜெனரல் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டார். எப்போதும் பத்திரிகையாளர்களிடம் ஓரிரு வார்த்தைகளை மட்டுமே உதிர்த்துவிட்டுப் போகும் ஆச்சார்யா விடம் நாம் பிரத்யேக பேட்டி கேட்டதும் சட்டென்று சம்மதித்தார். அட்வகேட் ஜெனரல் பதவியிலிருந்து நீங்கள் விலக அரசியல் பிரஷர் வந்ததா?

‘‘இதிலென்ன ஒளிவு மறைவு... கர்நாடக அரசு மற்றும் பா.ஜ.க. தரப்பிலிருந்து அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவி விலக வேண்டுமென கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். 50 வருடங்களாக வழக்கறிஞராகப் பணி செய்கிறேன். எ ன்னைப் பொறுத்தவரை, அட்வகேட் ஜெனரலாக இருப்பவர் அரசு சிறப்பு வழக்கறிஞராக பதவி வகிக்க சட்டத்தில் எந் தத் தடையுமில்லை. அதனால், ஜெயலலிதா வழக்கு தொடர்பான சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். பா.ஜ.க. மட்டுமல்ல... பல்வேறு அரசியல் தரப்புகளிலிருந்தும் எனக்கு தொடர்ந்து நிர்ப்பந்தம் வந்தன!’’

நீங்கள் ராஜினாமா செய்தது பெரிய பதவி இல்லையா?

‘‘என்னை அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்தான். இப்போது பல்வேறு தரப்பினர் எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். அதற்காக, நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? அரசியல் தளத்தின் பல முனைகளிலிருந்து வந்த நெருக்கடியால், ‘அட்வகேட் ஜெனரல் பதவியை வைத்துக்கொள்வேன். ஜெயலலிதா வழக்கை விட்டுவிடுவேன்’ என அவர்கள் நினைத்திருக்கலாம்... நான் ஏற்கெனவே ஐந்து முறை அட்வகேட் ஜெனரலாக இருந் தவன். அந்தப் பதவி எனக்குப் புதிதல்ல. அரசியல் பிரஷரின் எண்ணத்திற்கு மாறாக அட்வகேட் ஜெனரல் பதவியை நான் ராஜினாமா செய்தது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம். ஒரு பணியை கையில் எடுத்துக்கொண் டதும் அது முழுமையடையாமல் அதிலிருந்து பின்வாங்கி விட்டுவிலகுவது என் பாணி அல்ல. அதனால்தான் இப்போது நிம்மதியான மனநிலையில் சிறப்பு வழக்கறிஞர் பதவியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்..’’

கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா, ‘ஆச்சார்யாவுக்கு யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை’ என்கிறாரே?

‘‘நிச்சயமாக அவர்கள் நெருக்கடி தந்தார்கள் என்பதை பகிரங்கமாகவே நான் சொல்வேன். இப்போதும் அதையே கர்நாடக அரசு தரப்பிலும் பா.ஜ.க. மேலிடத்திலும் பட்டவர்த்தனமாகச் சொல்ல விரும்புகிறேன். நெருக்கடி இல்லாமலா ‘லோக் ஆயுக்தா’ நீதிமன்றத்தில் பொய் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்?’’

முதல்வர் தரப்பு, ‘அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை. ஆச்சார்யா இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது’ என்றுதானே சொல்கிறது?

‘‘இதற்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். இந்த இரண்டு பதவிகளையும் தொடர்ந்து செய்வதற்கு எந்தத் தடையுமில்லை. அரசு சிறப்பு வழக்கறிஞராகப் பதவி வகித் தபோதே, அதாவது 2004-லிருந்து பதவியில் இருந்தபோதே, 2007 மற்றும் 2008-ல்கூட அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்தேனே... இது என்ன புதிய விஷயமா என்ன?’’

பி.எம்.எஸ். கல்லூரியில் நீங்கள் டிரஸ்டியாக இருக்கிறீர்கள். அதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு பற்றி என்ன சொல்கிறீர்கள்?

‘‘அது நிச்சயமாக பொய் வழக்கு. அந்த வழக்கை எதற்காகப் போட்டிருக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும்!’’ என்று சொல்லி முடித்த ஆச்சார்யா, வயதைப் பொருட்படுத்தாமல் மிடுக்கோடு கிளம்பினார்!
thanks kumudam + chandran NH

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக