வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

நவீன மெருகேற்றலுடன் கர்ணன் படம் மீண்டும் ரிலீஸாகிறது!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1964களில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ஹிட்டான படம் “கர்ணன்”. கர்ணன் என்ற பெயரை கேட்டதும் சிவாஜியின் உருவம் மனதில் தானாகத் தோன்றும். 
சிவாஜி கர்ணனாகவே மாறி படத்தில் நடித்திருந்தார்.   “கொடுத்த வாக்கை காபாற்ற உயிரையும் துச்சமென மதித்தல்”, ”தானம் என்று வந்துவிட்டால் குருதியையும் இன்முகத்துடன் வழங்குதல்” போன்ற பற்பல கருத்துக்களை சாதரணமாக மனதில் பதித்து விடும் படம் கர்ணன்.
கர்ணன் படத்தில் கூறப்பட்டுள்ள இத்தகைய கருத்துக்களை இன்றைய சமுதாயத்தினரின் மனதில் பதிக்க விரும்பிய திவ்யா பிலிம்ஸின் சாந்தி சொக்கலிங்கம் இந்த படத்தை மறுவெளியீடு செய்கிறார்.
 பழைய கர்ணன் திரைப்படத்தின் தரத்தை சற்றும் பாதிக்காத வகையில் புதிய படம் அமைய வேண்டும் என்பதில் கவனமாக செயல்பட்டுள்ளனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இடம்பெற்றுள்ள ”உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது” என்ற பாடல் தற்போதைய தலைமுறையினர் கூட விரும்பிக் கேட்கும் பாட்டு.
 இதற்காக புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு படத்தின் ஆடியோ மற்றும் விஷுவலை சிறந்த முறையில் மெருகேற்றி உள்ளனர். திரையுலகில் இந்த புதிய முயற்சி வெற்றியடைந்தால் இது போல வேறு சில படங்களை உருவாக்க இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இவர்களின் இந்த புதிய முயற்சியை ஊக்குவித்து ராஜ் டி.வி புதிய கர்ணன் படத்தை தமிழகம் முழுவது வெளியிடும் உரிமையை வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக