புதன், 15 பிப்ரவரி, 2012

ஆறுமாத காலத்திலேயே ஆறுமுகம் நூறு கோடி செங்கோட்டையன் பதவியேற்று



சசிகலா வெளியேற்றப்பட்ட பிறகு திவாகரன், ராவணன் என வரிசையாக கைது நடவடிக்கைகள் தொடர்ந்தபோதுகூட ஏற்படாத அதிர்ச்சி அலையை கட்சி வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது,
அமைச்சர் செங்கோட்டையனிடம் உதவியாளராக இருந்து வந்த ஆறுமுகத்தின் கைது! காரணம், முதல்வரே இவ்விஷயத்தில் நேரடியாக இறங்கி நடவடிக்கை எடுத்திருப்பதுதான்!
அமைச்சரவையில் மூத்தவரும், அ.தி.மு.க.வில் மிக முக்கிய நபரும், முதல்வருக்கு நெருக்கமானவருமான செங்கோட் டையனின் உதவியாளரைக் கைது செய்ய முதல்வரே உத்தரவிட்டது ஏன்? இதுதான் ஒவ்வொரு அ.தி.மு.க.வினரையும் குடைந்து கொண்டிருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.
இந்தக் கேள்விக்கு விடை தெரிய வேண்டுமெனில், முதலில் ஆறுமுகத்தைப் பற்றித் தெரிந்துகொண்டால்தான் முடியும் என்பதால் அவரைப் பற்றி முதலில் விசாரித்தோம்...

சேலத்தை அடுத்த எடப்பாடியிலிருந்து மகுடஞ்சாவடிக்குப் போகும் பாதையில் உள்ள சின்ன குக்கிராமம்தான் ஆறுமுகத்தின் சொந்த ஊர். அங்கு ஓடு போட்ட ஒரு வீடு மட்டுமே ஆறுமுகம் குடும்பத்துக்குச் சொந்தம். பி.இ. படிப்பை முடித்த ஆறுமுகம், 99-ல் பல்லவன் போக்குவரத்துக்கழகத்தில் பயிற்சியில் சேர்ந்தார்.

அதனால் சென்னையில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் எம்.பி.யான எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தங்கி பயிற்சிக்குச் சென்று வந்தார். அப்போது ஊர்ப்பாசத்தில் நேரம் கிடைக்கும்போது செங்கோட்டையன் வீட்டிற்கும் சென்று வருவார். அந்த சமயத்தில் செங்கோட்டையன் மயிலாப்பூர் லஸ் பகுதியிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிரு ப்பில் தங்கியிருந்தார்.

இதற்கிடையே அரசியலில் ஏற்பட்ட சிறு பின்னடைவால் தீவிர அரசியலிலிருந்து விலகி விவசாயம் பார்க்க ஊருக்குச் சென்றுவிட்டார் செங்கோட்டையன். பின்னர் சில மாதங்கள் கழித்து மீண்டும் சென்னைக்கு வந்தார் செங்கோட்டையன். இம்முறை பழையவீடு ராசியாக இல்லை என்று நினைத்து மயிலாப்பூரில் உள்ள அப்பு முதலி தெருவில் குடியேறினார்.

அந்தச் சூழ்நிலையில் ஏற்கெனவே அறிமுகமான தொடர்பைப் பயன்படுத்தி ஆறுமுகம் மீண்டும் வந்து போக ஆரம்பி த்தார். ஆரம்பத்தில் செங்கோட்டையனை ரயில் ஏற்ற பெட்டியை எடுத்துச் சென்றுகொண்டிருந்தவர் கொஞ்ச நாட்களில் அவருடனேயே தங்கத் தொடங்கிவிட்டார். செங்கோட்டையனின் குடும்பம் சொந்த ஊரில் இருந்ததால், அவருக்கு சாப்பாடு உட்பட பல வேலைகளையும் ஆறுமுகமே உடனிருந்து கவனித்து வந்தார். இந்த நிலையில் 2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில் செங்கோட்டையன்மீது சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. மேலும் ஜெயலலிதாவின் தேர்தல் டூர் புரோகிராமை வேறு சிலரே கவனித்து வந்தனர். ஆனால் அவர்கள் அதைச சொதப்பிவிட, உடனே ஜெயலலிதா செங்கோட்டையனை அழைத்தார். அதுதான் அவருக்குக் கிடை த்த ரீஎன்ட்ரி. அதன்பிறகு எல்லாமே ஏறுமுகம்தான்! சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையானார். ஜெயலலிதாவின் எல்லா டூர் புரோகிராம்களையும் அவரே முன்னின்று கவனித்தார். அம்மாவின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவரானார். இப்போது எம்.எல்.ஏ.வாகி, அமைச்சராகவும் ஆகிவிட்டார்.

ஆனாலும் அதே ஆறுமுகத்தால்தான் வில்லங்கம் ஏற்படும் என்பதை அமைச்சர் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை’’ எ ன்ற கட்சிக்காரர்கள் அந்த விவகாரத்தை நம்மிடம் விரிவாக விளக்கினர்.

‘‘2005-ல் ஆறுமுகத்திற்குத் திருமணம் நடந்தது. குடும்பத்தோடு வெளியில் தங்கிவிட்டால் அவ்வப்போது வந்து செல்வது கடினம் என்று கூறிய ஆறுமுகம், செங்கோட்டையன் இருந்த வீட்டின் மாடி வீட்டையே வாடகைக்கு எடுத்துக் கொண்டார். கீழே இருந்த செங்கோட்டையன் வீட்டிற்கு இருபதாயிரம் ரூபாய் வாடகை. மாடியில் ஆறுமுகம் இருந்த வீட்டிற்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் வாடகை! அதுவரை செங்கோட்டையனுக்கான உணவு இத்யாதி விஷயங்களை ஆறுமுகம் மட்டுமே பார்த்துவந்த நிலையில், இப்போது அவரது மனைவி சுகுணாவும் உடனிருந்து உதவி செய்யத் தொடங்கினார். இதுவே பல்வேறு வில்லங்கங்களுக்குக் காரணமாகிவிட்டது. செங்கோட்டையன் ரயிலில் பயணம் செய்யும்போது ஆறுமுகம் மட்டுமின்றி அவரது மனைவி சுகுணாவும் சேர்ந்துகொள்வார். இந்தத் தொடர்பு செங்கோட் டையன் இப்போது அமைச்சரான பிறகும் தொடர்ந்தது. ஆனால், மயிலாப்பூர் வீட்டுக்குப் போவதைத் தவிர்த்துவிட்டு இடத்தை மாற்றிக் கொண்டார்கள்.

கட்சி வேலையாக வெளியில் சென்று வந்ததும் கரைவேட்டியுடன் அமைச்சருக்கான காரிலிருந்து இறங்கி விடுவார் செங்கோட்டையன். அங்கே அவருக்காக ஆறுமுகத்தின் எட்டாம் நம்பர் கொண்ட சில்வர் நிற ஸ்விஃப்ட் கார் தயாராக இருக்கும். அதில் பேண்ட், டி-சர்ட் உட்பட எல்லாமே இருக்கும். காரில் சென்றபடியே உடையை மாற்றிக் கொண்டு ஆழ்வார்பேட்டையில் இருக்கும் கெஸ்ட் ஹவுஸுக்குப் போய்விடுவார்.

இந்த விஷயங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக செங்கோட்டையன் குடும்பத்திற்குத் தெரியவந்திருக்கிறது. அவர்கள் ஆறுமுகத்தை வெளியில் அனுப்பிவிட எவ்வளவோ முயன்றார்கள்; ஆனால் முடியவில்லை. ஒருகட்டத்தில் எல்லாமே ஆறுமுகத்தின் கட்டுப்பாட்டில் போய்விட்டது. அமைச்சரின் மகன் கதிரேசன் ஏதாவது கேட்டாலும்கூட ஆறுமுகத்தைப் பார்க்கச் சொல்லிவிடுவார் செங்கோட்டையன். இதனால் மனம் நொந்துபோன குடும்பத்தினர், இந்த விவகாரங்களுக்கு முடிவு தேடி முதல்வருக்கு அடுத்த இடத்திலுள்ள முக்கிய நபர் ஒருவரைச் சந்தித்து முறையிட்டிருக்கிறார்கள். அவரும் செங்கோட்டையனை அழைத்துப் பேசியிருக்கிறார். ஆனால் செங்கோட்டையனோ ‘‘அதை விடுங்கண்ணே’’ என்று கூறி நழுவிவிட்டாராம். இந்த நிலையில் கடந்த ஜனவரி முதல் தேதி புத்தாண்டு தினத்தன்றுகூட செங்கோட்டையன் வீட்டிற்கு வராமல் போக, குடும்பத்துக்குள் பூகம்பம் வெடித்திருக்கிறது. இனி இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவு செய்த குடும்பத்தினர் முதல்வரிடமே போய் முறையிடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

செங்கோட்டையனின் பிறந்த நாளான ஜனவரி 9-ம் தேதி அன்று அவர் குடும்பத்துடன் சென்று முதல்வரைச் சந்தித்து ஆசிபெறுவார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, எல்லா விவரங்களையும் ஒரு மனுவாக எழுதி முதல்வரிடம் கொடு த்துவிடுவது என்று ரெடியாகி இருக்கிறார்கள். ஆனால் 9-ம் தேதியன்று தேனியில் நடந்த விழாவில் செங்கோட்டையன் இருந்துவிடவே, மறுநாள்தான் அதாவது ஜனவரி 10-ம் தேதி அவர் முதல்வரைச் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது குடும்பத்தார் யாரையும் அவர் உடன் அழைத்துச் செல்லவில்லை.

இதையடுத்து, முதல்வரை தனியாக சந்திப்பதற்கு ஒரு அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறார்கள். கடந்த 10-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை பதினொன்றரை மணிக்கு தோட்டத்திலிருந்து அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது. செங்கோட் டையனின் மனைவி ஈஸ்வரி அம்மாள் மூட்டு வலி காரணமாக நடக்க சிரமப்பட்டுக் கொண்டிருப்பதால் அவரின் மகன் கதிரேசனும், மருமகள் லாவண்யாவும் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்தனர். ‘ஏற்கெனவே உதவியாளராக இருந்த எழி ல்தான் அப்பாவின் பெயர் கெடவும் வழக்குகள் வரவும் காரணமாக இருந்தார். இப்போது உதவியாளராக இருக்கும் ஆறுமுகமும் தனது மனைவி மூலம் அமைச்சரை கைக்குள் வைத்துக்கொண்டு கோடி கோடியாக கொள்ளையடிக்கிறார். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அப்பா கேட்கமாட்டேன் என்கிறார். அம்மா அவருக்கு எவ்வளவோ கவுரவம் கொடுத்து வைத்திருக்கிறீர்கள். ஆனால் இந்த சின்ன விஷயத்தில் அவர் அசிங்கப்பட்டுவிடுவாரோ என்று பயமாக இ ருக்கிறது. அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அசிங்கங்கள் வராமல் இருந்தாலே போதும். அம்மாதான் எங்க குடும்பத்தைப் காப்பாற்றணும்’ என்று கூறி அழுதிருக்கிறார்கள். அனைத்து விஷயங்களையும் பொறுமையுடன் கேட்டு உள் வாங்கிக்கொண்ட ஜெயலலிதா, ‘நீங்கள் எதற்கும் கவலைப்படாமல் போங்கள். நான் எல்லாவற்றையும் பார் த்துக் கொள்கிறேன்’ என்று ஆறுதலும் தைரியமும் கூறி அனுப்பி வைத்திருக்கிறார். அடுத்த அரைமணி நேரத்தில் போலீஸ் உயரதிகாரிகளுக்கு கார்டனிலிருந்து உத்தரவுகள் பறந்தன. மூன்று மணியளவில் சுமார் ஐம்பது பேர் கொண்ட போலீஸ் ஆறுமுகத்தின் வீட்டைச் சுற்றி வளைத்து அவரைக் கைது செய்தது. அவருடன் செங்கோட்டையன் டிரைவர் ராஜசேகரும் கைது செய்யப்பட்டார். ஆறுமுகத்தின் அடாவடித்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருந்தாலும், செங்கோட்டையனின் உதவியாளர் என்பதால் அவர்மீது புகார் கொடுக்க பலரும் தயங்கினார்கள். கடைசியில் ஆறுமுகம் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரான கோவர்த்தனின் மனைவியை ஆறுமுகம் மிரட்டியது தொடர்பாக ஒரு புகாரைப்பெற்று ஆறுமுகத்தை புழல் சிறையில் அடைத்துள்ளனர்’’ என்று கூறி முடித்தார் அவர்.

இந்த விவகாரம் செங்கோட்டையனின் அமைச்சர் பதவிக்கே சிக்கலை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எ ன்கின்றனர் விவரமறிந்தவர்கள். முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கை எல்லா அமைச்சர்களையும் அதிர்ச்சிக்குள்ள £க்கியிருக்கிறது. அமைச்சர்களின் பெயரைச் சொல்லி ஆட்டம் போடும் உதவியாளர்கள் எல்லாம் இப்போது ஆடிப்போயிருக்கின்றனர். உதவியாளர்கள் விஷயத்திலும் சரி, மற்ற விஷயத்திலும் சரி; அமைச்சர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியாகவே இந்த விவகாரம் கவனிக்கப்படுகிறது.

வில்லங்க உதவியாளர்கள்!
ஏற்கெனவே செங்கோட் டையன் அமைச்சராக இருந்த
போது உதவியாளராக இருந்த
வர் எழில். அவர்மீதும் இதே
போன்ற குற்றச்சாட்டுகள் இருந்
தது. செங்கோட்டையன் சொத்துக்
குவிப்பு வழக்கில் கைதானபோது கூடவே சிறை சென்றார் இந்த எழில்.

உண்மை விசுவாசி!
செங்கோட்டையனைப் பொறுத்தவரையில் கட்சிக்காரர்களிடம் தனிமரியாதை உண்டு. அதைப் பற்றி நம்மிடம் பேசிய மூ த்த தலைவர் ஒருவர், ‘‘அவரைப்போல் ஒரு உழைப்பாளியைப் பார்க்க முடியாது. இரவு பகலாக கட்சிக்கு உழைக்கக் கூடியவர். எந்த நேரமும் அம்மா, அம்மா என்பதுதான் அவரின் உச்சரிப்பாக இருக்கும். சசிகலா குடும்பத்திற்குப் பிடிக்காதவர்கள் பலர் கட்சியிலிருந்து வெளியேறி விட்டார்கள். பலர் அவர்களிடமே சரண்டராகிவிட்டார்கள். ஆனால் கடைசிவரை அந்தக் குடும்பத்தோடு சமரசமாகாமலும் அம்மாவின் விசுவாசத்தை கொஞ்சமும் இழக்காமலும் இருந்தவர் செங்கோட்டையன்தான்.

ஒருமுறை அம்மாவின் வரவேற்புக்காக யானை ஒன்றை பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்திருந்தனர். இருபது கிலோ மீ ட்டர் தூரத்திலிருந்து யானையை அழைத்துவரவேண்டும். அதிகாலை நேர விழா என்பதால் நள்ளிரவே அங்கு சென்ற செங்கோட் டையன், யானையை அழைத்துக்கொண்டு இருபது கிலோமீட்டர் கூடவே நடந்து, விழா நடந்த இடத்துக்கு வந்தார். ஏன் இப்படி என்று கேட்டபோது, ‘வரும் வழியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டுவிட்டால் அம்மாவுக்குத்தானே கெட்ட பெயர்!’ என்று சொன்னார். அந்த அளவிற்கு அம்மா விஷயங்களில் கவனம் எடுத்துக் கொள்வார். அதேபோல் கட் சிக்காரர்களிடம் பணம் வாங்கினார், பதவிக்காகப் பணம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டுகள் எதுவுமே அவர்மீது வந்தது கிடையாது. ஆனாலும் ஒரு சின்ன மைனஸ்... பெண்கள் விஷயம்தான்’’ என்று வருத்தப்பட்டார்.

ஆறுமாதத்தில் நூறுகோடி!
அமைச்சரின் பெயரைச் சொல்லி பல காரியங்களை முடித்து சுவை பார்த்த ஆறுமுகம், அமைச்சரின் கையெழுத்தையே போலியாகப் போட்ட விவகாரமும் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதுமட்டுமின்றி ராவணனோடும் ரகசியத் தொடர்பில் இருந்த ஆறுமுகம், அவர்கள் பெயரைச் சொல்லி மணல் குவாரியில் இரண்டு கோடி மோசடி செய்ததாக வும், வேறொருவரிடம் இருபத்தேழு லட்ச ரூபாய் ஏமாற்றியதாகவும் புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. எனவே, ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

செங்கோட்டையன் பதவியேற்று ஆறுமாத காலத்திலேயே ஆறுமுகம் நூறு கோடி சம்பாதித்து விட்டாராம். தனது மனைவியின் பிறந்த நாளான ஜனவரி 8-ம் தேதி ஆறுமுகம் ஒரு பெரிய பார்ட்டி கொடுத்திருக்கிறார். அப்போது போதையில் ஆறு மாதத்தில் நூறு கோடியைத் தொட்டுவிட்டதாகவும் அதற்காகத்தான் இந்த ஸ்பெஷல் பார்ட்டி என்றும் கூறினாராம்.

திருப்பதி தந்த திருப்பம்!
செங்கோட்டையன் அமைச்சராக அறிவிக்கப்பட்டதும் திருப்பதிக்குச் சென்றிருக்கிறார். அப்போது அவருடன் ஆறுமுகமும் அவரின் மனைவி சுகுணாவும் உடன் சென்றிருக்கிறார்கள். திருப்பதியில் பத்மாவதித் தாயார் ஆலயத்தில் குங்கும பிரசாதத்தை வாங்கிய செங்கோட்டையன் மீதி குங்குமத்தை உடன் வந்த சுகுணாவின் கையில் கொடுத்தி ருக்கிறார். அடுத்து தன் கையிலிருந்த குங்குமத்தைத் துடைக்க செங்கோட்டையன் துணியைத் தேடியபோது தனது முந் தானையை எடுத்துக் கொடுத்திருக்கிறார் சுகுணா.

thanks kumudam + chandran NH

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக