திங்கள், 13 பிப்ரவரி, 2012

தமிழ்சினிமாவை விட்டு விலகியது ஏன்? தமன்னா

தமிழ் சினிமாவை விட்டு விலகியது ஏன் என்ற கேள்விக்கு நடிகை தமன்னா பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக, ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. ஏனோ சில காரணங்களால் தமிழ் சினிமாவில் நடிக்காமல் விலகியிருக்கிறார். இந்த விலகலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தமன்னா வாயில் இருந்து எந்தவொரு காரணமும் சொல்லப்படவில்லை.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருப்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார்.
அதில், எனக்கு படங்களின் எண்ணிக்கை முக்கியமில்லை. தரமான படங்களாக இருக்க வேண்டும். எந்த மொழியாக இருந்தால் என்ன...? சில நடிகைகள் ஒரே நேரத்தில் ஏழெட்டு படங்களில் நடிக்கின்றனர். அதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த நடிகைகளை போல் நான் இருக்கமாட்டேன். நிறைய படங்களில் ஒரே நேரத்தில் நடிப்பது பயன் தராது என கருதுகிறேன். தமிழ் படங்களை நான் ஒதுக்கவில்லை. நல்ல கதை, நம்பிக்கையான இயக்குனர்களுக்காக காத்திருக்கிறேன், என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக