வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

ஹன்சிகா:பிரபுதேவாவையும் என்னையும் இணைத்து பேசாதீர்கள்

பிரபுதேவாவையும் என்னையும் இணைத்து பேசாதீர்கள். அவர் எனக்கு அண்ணன் போன்றவர்’ என்று நடிகை ஹன்சிகா மோத்வானி கூறினார்.
காதல் ஜோடியான பிரபுதேவா நயன்தாரா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான், நயன்தாரா மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த பிரிவுக்கு காரணம் ஹன்சிகா மோத்வானியை பிரபுதேவா நேசிப்பதுதான் என்றும் வதந்தி பரவி உள்ளது. இதற்கு ஹன்சிகா மோத்வானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
‘பிரபுதேவாவுடன் என்னை இணைத்து இதுபோன்ற வதந்திகள் வருகின்றன.

இதற்கெல்லாம் பதில் சொல்வதைவிட, அமைதியாக இருப்பதுதான் கவுரவமான செயல் என்று கருதுகிறேன்.
இவை அடிப்படை, ஆதாரம் இல்லாத வதந்திகள். அவர் எனக்கு அண்ணன் போன்றவர். இத்துடன் வதந்தியை நிறுத்திக்கொள்ளுங்கள். அண்ணன் & தங்கையை இணைத்து பேசாதீர்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக