புதன், 1 பிப்ரவரி, 2012

ஜெயலலிதா,,,திமுக மத்திய அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி

முதல்வர் ஜெயலலிதா அனுமதியோடு
திமுக மத்திய அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி
தமிழகத்தை, மாற்றாந்தாய் மனப்போக்கில் மத்திய அரசு நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ள, அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, இதைக் கண்டிக்கும் வகையில், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டுவதாக அறிவித்துள்ளது.
அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் ஆலோசனைக் கூட்டம், அ.தி.மு.க., தலைமைக் கழகத்தில் நடந்தது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைத் தராமல், மாற்றாந்தாய் மன நிலையில் மத்திய அரசு வஞ்சித்து வருவது கண்டிக்கத்தக்கது.
தானே புயலால் கடலூர் மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையிலும், ஓரவஞ்சனையோடு நிதி ஒதுக்கியுள்ளது.
இந்நிதி, யானைப் பசிக்கு சோளப் பொரி போடுவது போல் உள்ளது. தமிழகத்துக்காக, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., அமைச்சர்கள் வாதாடாமல், மவுனியாக உள்ளனர்.

இந்த துரோகத்தைக் கண்டிக்கும் வகையில், தமிழகத்துக்கு வரும் தி.மு.க., மத்திய அமைச்சர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதியோடு கறுப்புக் கொடி காட்டப்படும் என்றுமு நிறைவேற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக