வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

தனிநபர் வருமான வரிவிலக்கு ரூ.3 லட்சமாக உயர்கிறது?

தனி நபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தலாம் என மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
தற்போது ரூ 1.8 லட்சமாக உள்ள இந்த உச்சவரம்பு ரூ 2 லட்சமாக உயர்த்தப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது, இதனை ரூ 3 லட்சமாக உயர்த்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இன்று சமர்ப்பிக்கப்படும் நிதி மசோதாவுடன், இந்தப் பரிந்துரைகளையும் நிலைக்குழு ஏற்கும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே ரூ 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் கணக்கு தாக்கல் செய்ய விலக்கு அளிக்கப்பட்டுள்ள சூழலில், ரூ 3 லட்சம் வரை வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுவது நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரிய நிம்மதியைத் தரும் விஷயமாகும்.

மேலும் வரி விகிதம் என்பது மார்க்கெட்டில் நிலவும் நுகர்வு விலைக் குறியீட்டெண் அடிப்படையில் அமைய வேண்டும் என்ற ஐக்கிய முன்னணி அரசின் திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றாகவே இந்த வருமான வரி உச்சவரம்பு நியமனம் பார்க்கப்படுகிறது. மேலும் பல வருமான வரி சீர்த்திருத்தங்களும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

ரூ 3 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீத வரியும், ரூ 20 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதமும், அதற்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீதமும் இனி வரி விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக