செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

சென்னைக்கு 3, பிற பகுதிகளுக்கு 6 மணி நேரம் மின்வெட்டு?

சென்னையில் நிலவி வரும் மின்வெட்டை 1ல் இருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கவும், பிறபகுதிகளில் 6 மணி நேரமாகக் குறைக்கவும் மின்வாரியம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் 8 முதல் 12 மணி நேர மின்வெட்டு ஏற்படுகின்றது. சென்னையில் மட்டும் தினமும் 1 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. இந்த கடும் மின்வெட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பல குறு, சிறு தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்ப்டடுள்ளது. பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் நிலவி வரும் மின்வெட்டை 1ல் இருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கவும், பிற பகுதிகளில் 6 மணி நேரமாகக் குறைக்கவும் மின்வாரியம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தவிர தொழிற்சாலைகளுக்கு வழங்கும் மின் வினியோகத்தை சற்று அதிகரிக்கவும் மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

மின்வாரியத்தின் பரிந்துரைகள் முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் இந்த புதிய மின்வெட்டு நேரம் அமலுக்கு வரும் என்று மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக