செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

2G வெளிநாட்டு தொலை தொடர்பு நிறுவனங்கள் தூதரக ரீதியிலான


புதுடில்லி:சுப்ரீம் கோர்ட் உத்தரவால் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு தொலை தொடர்பு நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பாதுகாப்பதற்காக, தூதரக ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 உரிமங்களை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது. இதில், யுனிநார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 22 உரிமங்களும் அடக்கம். யுனிநார் நிறுவனம், நார்வேயின் டெலிநார் நிறுவனத்துடன் இணைந்தது. தற்போது உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதால், அந்த நிறுவனத்தின் முதலீடு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம், நார்வேயில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

அமைச்சரை சந்திக்க திட்டம்:இந்நிலையில், நார்வே தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரிக்மோர் அசாருத், நேற்று இந்தியா வந்தார். அவர்

கூறியதாவது:கோர்ட் உத்தரவுக்கும், என் வருகைக்கும், எந்த தொடர்பும் இல்லை. பெங்களூரில் ஒரு விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ளேன். இதற்கிடையே, தொலைத்தொடர்பு உரிமங்கள் விவகாரம் குறித்து, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரை சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளேன். இதற்காக அவரிடம் நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டுள்ளேன்.இவ்வாறு அசாருத் கூறினார். தூதரக நடவடிக்கை:யுனிநார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சிக்வோ பெராக் கூறியதாவது: ரூபாய் 14 ஆயிரம் கோடி அளவுக்கு, இதில் முதலீடு செய்துள்ளோம். எனவே, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து, மறு ஆய்வு மனு தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளோம். இதுதவிர, தூதரக ரீதியிலான முயற்சிகளை மேற்கொள்ளவும், திட்டமிடப்பட்டுள்ளது. நார்வே அரசுடனும் பேச்சு நடத்தி வருகிறோம். மேலும், புதிதாக நடக்கவுள்ள ஏலத்தில் பங்கேற்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு சிக்வோ கூறினார். இதுபோல், ரஷ்யாவின் உதவியுடன் செயல்படும் ஷ்யாம்-சிஸ்டெமா நிறுவனத்தின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தங்களின் முதலீட்டை பாதுகாப்பதற்கு உதவும்படி, இந்திய அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என, ரஷ்ய அரசை, இந்த நிறுவனம் வற்புறுத்தி வருகிறது.
இதுகுறித்து, டாட்டா வட்டாரங்கள் கூறுகையில்," கடந்த 2008ல் தொலைத் தொடர்பு

உரிமங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துவங்குவதற்கு 18 மாதங்களுக்கு முன்பே, தொலைத் தொடர்பு சேவையை பெறுவதற்காக நாங்கள் விண்ணப்பித்து விட்டோம். எனவே, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம்'என்றன. புதிய ஏலம் எப்போது? தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்)
தலைவர் ஜே.எஸ்.சர்மா கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, ஏற்கனவே உரிமங்கள் பெற்ற நிறுவனங்கள், அவற்றை அரசிடம் சரண்டர் செய்வதற்கு வசதியாக, வெளியேற்ற கொள்கை (எக்சிட் பாலிசி) குறித்த, பரிந்துரைகள் விரைவில் அறிவிக்கப்படும். இத்துடன், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான புதிய ஏலம் குறித்தும் அறிவிக்கப்படும். இன்னும் இண்டு மாதங்களுக்குள் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு சர்மா கூறினார்.
இதற்கிடையே, சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கட்டணங்களை உயர்த்த அனுமதிக்கும்படி, டிராயை வலியுறுத்தியுள்ளதால், இதுகுறித்து மற்ற நிறுவனங்களின் கருத்துக்களை கேட்பதற்கான நடவடிக்கையை டிராய் துவங்கியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக