திங்கள், 20 பிப்ரவரி, 2012

பள்ளி மாணவிகள் இருவரை 15 பேர் கும்பல் பலாத்காரம்


இந்தூர் : மத்தியப் பிரதேசம் இந்தூர் அருகே உள்ளது பேட்னா கிராமம். இப்பகுதியை சேர்ந்த ஜாவேத் என்ற இளைஞன், டீன்ஏஜ் பள்ளி மாணவியுடன் ஒருவருடம் பழகியுள்ளான். அந்தப் பெண்ணை விரும்புவதாகவும், இது குறித்து தனியாக பேசவேண்டும் என ஜாவேத் கூறியுள்ளான். மறுத்தால் அந்தப் பெண் வீட்டு முன் விஷம் குடித்து தற்கொலை செய்வதாக கூறியுள்ளான். பயந்துபோன மாணவி, தன்னுடன் பள்ளியில் படிக்கும் உறவுக்காரப் பெண்ணை துணைக்கு அழைத்து சென்று ஜாவேத்தை சந்திக்க முடிவு செய்தார். பேட்னா கிராமத்துக்கு அருகேயுள்ள தோப்புக்கு கடந்த 10ம் தேதி வரும்படி ஜாவேத் கூறியுள்ளான்.

மாணவிகள் இருவரும் ஆள்நடமாட்டம் இல்லாத தோப்புக்கு வந்து ஜாவேத்திடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென 10 பேர் கும்பல் வந்தனர். மாணவிகள் இருவரையும் தோப்புக்குள் இழுத்துச் சென்று அவர்கள் பலாத்காரம் செய்தனர். இச்செயலில் ஜாவேத்தும் ஈடுபட்டுள்ளான். தோப்புக்குள் எழுந்த சத்தத்தை கேட்டு, அருகில் உள்ள வயல்களில் வேலை செய்த 5 பேர் வந்தனர். மாணவிகளை காப்பாற்றுவதற்கு பதில், அவர்களும் பலாத்காரத்தில் ஈடுபட்டனர்.

வழக்கமான உற்சாகம் இல்லாமல், மிகவும் சோர்வாக காணப்பட்ட மாணவிகளிடம் பெற்றோர் நேற்று முன்தினம் விசாரித்ததில் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையை கூறினர். இதையடுத்து போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பலாத்கார காட்சியை செல்போனில் படம் பிடித்து, யாரிடமும் சொல்லக் கூடாது என அந்த கும்பல் மிரட்டியதாக போலீசாரிடம் மாணவிகள் தெரிவித்தனர்.

இது குறித்து பேட்டியளித்த பேட்னா காவல்துறை கண்காணிப்பாளர் சாய் மனோகர், ‘‘பலாத்காரத்தில் உள்ளூர் கவுன்சிலர் மகன் உட்பட 15 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக