வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

முத்தக்காட்சி! 14 வெட்டு!இயக்குனர் கவலையில்

பாலிவுட் பட உலகின் பிபல சண்டை இயக்குனர் டினு வர்மா இயக்கும் முதல் படம் காட்டுப்புலி. இந்த படத்தில் அர்ஜூன் ஹீரோவாக நடிக்கிறார். ஜோடியாக ப்ரியங்கா தேசாய் நடிக்கிறார். படத்தில் அர்ஜூன் ஒரு டாக்டர் ரோலில் நடிக்கிறார். 
அர்ஜூன் தனது மனைவி மற்றும் மகளுடன் ஒரு காட்டில் சிக்கிக்கொள்கின்றனர். அதன் பின்பு அங்கிருக்கும் நரமாமிசம் உண்ணும் மனிதர்களுடன் கதை நகர்கிறது. ஆக்‌ஷன் ஹீரோவை வைத்து படம் எடுக்கும் ஸ்டண்ட் இயக்குனர் நிறைய சண்டை காட்சிகளை வைத்தது போல் நிறைய முத்தக்காட்சிகளையும் வைத்துவிட்டார். 

காட்டு புலி படத்தை சென்ஸார் போர்டு தணிக்கை செய்யும் போது அதிகமாக இருந்த முத்தக் காட்சிகளை துண்டு துண்டாக வெட்டி போட்டுவிட்டது. ஒன்றா? இரண்டா? கிட்டத்தட்ட 14 காட்சிகளை வெட்டியிருக்கிறது.

 14 காட்சிகள் போய்விட்டதே என இயக்குனர் கவலையில் இருந்தாலும் எல்லோரும் பார்க்கும் வகையில் படம் இருக்கும் என சொல்லி தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறாராம். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக