வெள்ளி, 6 ஜனவரி, 2012

தமிழ் முகங்கள் Set property போல்தான் பாரதிராஜாவிற்கு

ரதி, ராதா, ரேவதி, ரஞ்சிதா, அமலா, பிரியாமணி, சுகன்யா, சொர்ணமால்யா. ரோஜா, குஷ்பு, அமலாபால், சரண்யா, ராஜஸ்ரீ இவர்கள் பாரதிராஜாவிடம் பொங்கி வழிகிற தமிழ் உணர்வுக்கும், மண்வாசனைக்கும் சாட்சிகள்!
இயக்குநர் இமையம் பாரதிராஜா படங்களில் சாதி உணர்வை பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் அவர் படத்தில்தான் உண்மையான கிராமத்து தமிழ் முகங்களை பார்க்க முடிந்தது?
-கு. செல்வநம்பி, திருச்சி.
ஆமாம்.
ஏரி, குளம், குட்டை, மாடு, ஆடு புழுதி, சகதி இவைகளை காட்டுவது கிராமத்து சூழலை காட்சிப் படுத்துவதற்காக. அதுபோலவேதான் அழுக்கான மனிதர்கள், வயதானவர்கள் என்று தமிழ் அடையாளம் தெரிவதற்காக Set property போல், கிராமத்து தமிழ் முகங்கள் காட்டப்பட்டது.
மற்றபடி படத்தின் முக்கிய வேடத்தில், கதாநாயகிகளாக வருகிற ‘அழகி’ களை அக்கிரகாரத்திலும், கேரளத்திலும் இருந்துதான் கண்டெடுக்கும் பாரதிராஜாவின் கலைக் கண்கள்.
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம்டிசம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக