வியாழன், 12 ஜனவரி, 2012

Sasi Jeya சேர்ந்து சந்தித்தாலே வழக்கில் தப்ப முடியாது


திருச்சி வேலுச்சாமி. அதிரடி கருத்துக்குச் சொந்தக்காரர். காமராஜர் காலத்திலிருந்து அரசியல் செய்து வருபவர். தமிழ் இன உணர்வாளர். எம்.நடராஜனுடன் நீண்ட கால நட்பு கொண்டிருப்பவர். போயஸ் கார்டனில் வீசிய புயல் குறித்து பேச சரியானவர் என்பதால் இவரிடம் பேசினோம்.
(மகாமகம் குளத்தில் இரண்டுபேரும் மாறி மாறி தண்ணீர் ஊற்றினீர் களே அதற்கு எந்த பொதுக்குழுவில் தீர்மானம் போட்டீர்கள். 60-வது கல்யாணத்திற்கு திருக்கடையூர் கோயிலில் இரண்டு பேரும் மாலை மாற்றினீர்களே அதற்கு எந்த பொதுக்குழுவில் தீர்மானம் போட்டீர்கள். வளர்ப்பு மகன் என்று தத்து எடுக்கும்போது எந்த பொதுக்குழுவில் தீர்மானம் போட்டீர்கள்.)


நக்கீரன் : நடராஜன் மற்றும் சசிகலா ஆகியோருடன் தங்களுடைய தொடர்பு பற்றி?


திருச்சி வேலுச்சாமி : திருச்சியில் பி.ஆர்.ஓ. வாக இருக்கும்போதே நடராஜன் எனக்குப் பழக்கம். ஆரம்பத்தில் ரொம்ப நெருக்கம் எல்லாம் கிடையாது. திருமணத்திற்குப் பிறகுதான் ரொம்ப நெருக்கம் ஏற்பட்டது. இன்னமும் நெருக்கம் ஆனது 89-ல்தான். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு நடந்த தேர்தலுக்காக தமி ழக ஜனதா கட்சி யின் சார்பாக நான் கூட்டணி பேச்சுவார்த் தைக்கு சென்ற போதுதான் இன்னமும் நெருக்கம் அதிகமாகி கடந்த 25 வருடமாக நெருக்கம் தொடர்கிறது. அவருடைய அத்தனை கூட்டங்களில் என்னுடைய கருத்தை சுதந்திரமாக சொல்லும் அளவுக்கு நெருக்கம். சசிகலாவை பொறுத்தவரையில் பொது இடங்களில் பார்த்தால் பேசுவார்கள். அவ்வளவு தான். நான் சுப்ரமணியசாமியுடன் போயஸ் கார்டன் செல்லும்பொழுது எல்லாம் சசிகலா தேனீர், பழரசம் கொடுப்பார்கள். உண்மையில் ஜெயலலிதாவுக்கு மிக உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தார்கள். அவர்களால் எந்த காரியத்தையும் சாதிக்காதவன் என்பதால் இவ்வளவு வெளிப்படையாக என்னால் பேச முடிகிறது.

நக்கீரன் : நீக்கம் அறிவிப்புக்கு பிறகு நடராஜனை பார்த்தீர்களா?



திருச்சி வேலுச்சாமி : அவரை சந்திக்க அவருடைய வீட்டிற்குச் சென்றேன். அவரை பார்க்க நிறைய பேர் காத்துக் கொண்டு இருந்தார்கள். அவர் என்னை மட்டும் அழைத்து 3 மணிநேரம் பேசினார். அப்போது நீங்க எப்போ அ.தி.மு.க.வில் உறுப்பினர் ஆனீர்கள், இப்போது நீக்கி இருக்கிறார்கள்? என்றபோது பலமாக சிரித்தார். அவர் சகஜமான நிலையில் தான் இருக்கிறார். அவருக்கு குழந்தையா குட்டியா? எந்த கவலையும் இல்லை.




நக்கீரன் : "தானே' புயல் வந்த அன்று மாலை பொதுக்குழு நடந்தது பற்றி?




திருச்சி வேலுச்சாமி : டிசம்பர் 30-ந் தேதி மாலை பொதுக்குழு நடந்தது. அன்றைக்கு காலையில்தான் தமிழ்நாட்டு வரலாற்றிலே இல்லாத அளவுக்கு மோசமான புயல் பாதிப்பு காலையில் 5.00 மணி முதல் 6.30 மணி வரை ஏற் பட்டது. தமிழ்நாட்டிலே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. லட்சக் கணக்கான மக்கள் வீடுகள் இழந்து நிற்கிறார்கள். சாப்பிடுவதற்கு சாப்பாடு கிடையாது, குடிக்க தண்ணீர் கிடையாது. கரண்ட் நின்று போனது. போக்குவரத்து எல்லாம் ஸ்தம்பித்து விட்டது. இப்படி குற்றுயிரும் கொலையுயிருமாக தவிக்கின்ற நேரத்தில் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்து இருக்கும் ஜெயலலிதா தன் கட்சியின் பொதுக்குழுவை கூட்டு கிறார். அங்கே மக்கள் பிரச்சினைகள் பற்றி ஏதாவது பேசினார்களா இல்லை. பாரதியார் பாடலில் வருவது போல் நண்பனாய், சேவகனாய், நல் ஆசானாய், எல்லாமும் தன்னோடு வாழ்ந்த சசிகலாவை நீக்கியதற்கு நியாயம் சொல்லி தீர்மானம் நிறைவேற்றி தண்டோரா போடுகிறார். ரோம் நகர் தீப்பற்றி எரிந்துகொண்டிருக் கும்போது நீரோ மன்னன் பெண் உருவமாய் பிடில் வாசித்துக் கொண்டு இருக்கிறார். இதுதான் ஆரம்பம்.




நக்கீரன்: ஜெ.வின் முதல் தேர்தல் களத்தில் நடராஜன் ஆற்றிய பணிகள் என்ன?


திருச்சி வேலுச்சாமி: 89-ம் வருடம் ஜெ. அணி, ஜா. அணி என்று இரண்டும் பிரிந்தவுடன் ஜெயலலிதா முதன்முதலாக போடி நாயக்கனூரில் தேர்தலில் நிற்கிறார்கள். அந்தத் தேர்தலை ஜெயலலிதாவுக்காக ஏ டூ இசட் முழுக்க முழுக்க பொறுப்பு எடுத்து நடத்தியதே நடராஜன்தான். அந்தத் தேர்த லில் எந்த வேலை நடந்தது என்று கூட ஜெயலலிதாவுக்கு தெரியாது. அந்தத் தேர்தலில் போஸ்டர் எடுத்து ஒட்டின பொன்ராஜ் எல்லாம் இப்போது தெருவில்தான் இருக்கிறார்கள். அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து நின்றது வெண்ணிற ஆடை நிர்மலா. ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்று அந்த வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக தேர்தல் வேலை பார்த்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம்.

நக்கீரன் : பிராமணர்கள் லாபி தமிழ் நாட்டில் எடுபடுமா?

திருச்சி வேலுச்சாமி: இந்தியாவிலே ஒரே கவர் னர் ஜெனரலாக இருந்தவர் ராஜாஜி. அவர் மகாத்மா காந்தியின் சம்பந்தி. மிகப்பெரிய அறிவாளி என்பது இந்தியா முழுமைக்கும் தெரியும். அந்த ராஜாஜி தமிழ்நாட்டில் தேர்தலில் நின்று ஜெயிக்க முடியவில்லை. அவர் முதலமைச்சராக ஒருமுறை வந்தபோது கூட எம்.எல்.சி.யாகத்தான் வந்தார். அப்போது அண்ணா கொல்லைப்புற வழியாக வந்தவர் என்று எழுதினார். அப்படி முதல்வராக வந்தவர் இரண்டு வருடத்திற்கு மேல் இருக்க முடியவில்லை. அவரையே ராஜினாமா பண்ண வைத்து விட்டார்கள். காரணம், திராவிட இயக் கங்கள் பிராமணர்களுக்கு எதிராக மிக கடுமையான பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார்கள். பிராமணியத்திற்கு எதிராக இருக்கிற அந்த இயக்கத்திலே ஒரு பிராமண பெண்ணை தலைவியாக்கி அவரை தேர்தலில் நிற்க வைத்து முதலமைச்சராக்கியது. மூன்றாவது முறை யாக தமிழக முதல்வராக்கியது அத்வானியா? இல்லை நரேந்திர மோடியா? இல்லை இப்போது நவீன ராஜ குருவாக இருக்கும் ஓர் எழுத்து தமாஷ் நடிகரா? இந்த கேள்விக்கு விடை தேடினாலே இன்றைக்கு நடக்கும் பிரச்சினைக்கு உண்மை நிலை ஜெயலலிதாவுக்கு மட்டும் அல்ல ஒவ்வொருவருக்கும் தெரியும்.



நக்கீரன் : சசிகலாவை நீக்கியது கட்சிக்கு நல்லது என்கிற சோ கருத்து சொல்லி இருக்கிறாரே?

திருச்சி வேலுச்சாமி : இந்த செயலுக்கு ஜெயலலிதா மீது நான் அனுதாபப்படுகிறேன். அவரை சுற்றி அவருக்காக உண்மையாக பாசம் வைத்தவர்கள் யாரும் இல்லை. இருந்ததும் இல்லை. எதிர்காலத்தில் இருக்கப் போவதும் இல்லை. இப்போது அவர் பெரிதும் நம்பி இருக்கும் சோ... எம்.ஜி.ஆர். இறந்தவுடன் ஜெ., ஜா என்று பிரிந்தபோது அவர் ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லை. 89-ல் தேர்தலில் நிற்கின்ற போது ஜெ.வை ஆதரித்து எழுதவில்லை. 90-களில் ஜெ. அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கும் போது இந்த சினிமா நடிகை எல்லாம் கருணாநிதியை எதிர்க்க முடியாது என்று சொன்னவர். 90 தேர்தலிலும் ஜெ.வை ஆதரிக்க வில்லை. 96 தேர்தலில் ஜெயலலிதா வுக்கு எதிராக வேலை பார்த்தார். ஜெயேந்திரரை கைது செய்தபோது இந்த ராட்சசிக்கு இன்னும் பசி அடங்கலையா? என்று பகிரங்கமாக விமர்சனம் செய் தவர். இப்படி எல்லாம் எந்த காலத்திலும் ஜெ.வை ஆதரிக்காத சோ இன்றைக்கு ஜெயலலிதாவை போல் புத்திசாலி முத லமைச்சர் இல்லை. தைரியமானவர்கள் இல்லை என்று பாராட்டி சொல்வது ஆச்சரியமான விஷயம் இல்லை. அவர் சொல்வதை உண் மை என்று நம்பும் ஜெயலலிதாவுக்காக அனுதாபப்படுகிறேன்.

நக்கீரன் : சசிகலாவை நீக்கியது குறித்து உங்கள் கருத்து?

திருச்சி வேலுச்சாமி : கொடநாடு எஸ்டேட்டில் ஜெ. சசியும் பங்குதாரர் என்பது தெரியுமா? தெரியாதா? அது வாங்கப்பட்டது தெரியுமா? தெரியாதா? சிறுதாவூர் பங்களா எப்படி கட்டப்பட்டது என்பது தெரியுமா? தெரியாதா? ஜெ.ஜெ. டி.வி. மற்றும் ஜெயா டி.வி.க்கு கோடி கோடியாக முதலீடு செய்து தானே நடத்தறாங்க? அதுல இவுங்க இரண்டுபேரும்தான் பங்கு தாரர்கள் என்பது ஜெயலலிதாவுக்கு தெரி யுமா? தெரியாதா? அதை எப்படி உருவாக்கினார்கள். அதற்கு பணம் எப்படி வந்தது என்பது தெரியுமா? தெரியாதா? ஆக சசிகலாவின் அனைத்து அசையா அசையும் சொத்துக்கள் அனைத்துக்கும் பங்குதாரர் ஜெயலலிதா மட்டும் தான். தான் எல்லாம் செய்து விட்டு தொடர்பு வைத்து இருப்பவர் களை கட்சியை விட்டு நீக்குவேன் என்று சொன்னால் கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு தன் னுடைய பிம்பத்தை ஜெயலலிதா வே நீக்குவதாக எண்ணவேண்டும்.

நக்கீரன் : ஜெ.-சசி மீண் டும் சேருவார்களா?

திருச்சி வேலுச்சாமி : கண் டிப்பாக சேருவார்கள். காரணம் பெங்களூர் வழக்கே போதும். பெங்க ளூர் வழக்கில் சேர்ந்து சந்தித்தாலே தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இப்போ தனித்தனியாக அந்த வழக் கை சந்தித்தால் அவ்வளவுதான் அவர்கள் தப்பவே முடியாது. அதுவும் இல்லாம இரண்டும் தனியாக இருக்க முடியாது. அவர்கள் சேர்ந்துவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. பிடிவாதமாக இருந்தால் கையில் விளக்கை வைத்துக் கொண்டு கிணற்றில் விழுந்த கதைதான்.


நக்கீரன் : சசி நீக்கம் குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் போட்டது பற்றி?

திருச்சி வேலுச்சாமி : அந்த காலத்தில் மகாமகம் குளத்தில் இரண்டுபேரும் மாறி மாறி தண்ணீர் ஊற்றினீர் களே அதற்கு எந்த பொதுக்குழுவில் தீர்மானம் போட்டீர்கள். 60-வது கல்யாணத்திற்கு திருக்கடையூர் கோயிலில் இரண்டு பேரும் மாலை மாற்றினீர்களே அதற்கு எந்த பொதுக்குழுவில் தீர்மானம் போட்டீர்கள். வளர்ப்பு மகன் என்று தத்து எடுக்கும்போது எந்த பொதுக்குழுவில் தீர்மானம் போட்டீர்கள்.

நக்கீரன் : மன்னார்குடி மாஃபியா போய் மைலாப்பூர் மாஃபியா வந்ததாக சொல்கிறார்களே?

திருச்சி வேலுச்சாமி: அவர்கள் ரொம்ப நாள் நீடிக்க முடியாது. ஜெயலலிதாவை சந் தோஷப்படுத்த யாராலும் முடியாது. சசிகலாவைத் தவிர, 30 வருடமாக இன்பத்திலும் துன்பத் திலும் நின்றவர்கள் யாரும் கிடையாது.


நக்கீரன் : சசிகலா தப்பே செய்யவில்லையா?

திருச்சி வேலுச்சாமி : ஜெயலலிதா, சசிகலா விஷயத்தில் நடந்துகொண்டது கொஞ்சம் கூட நியாயமே இல்லை. இவ்வளவு பேர் வீட்டில் வந்து தங் கும் போது இவர்களுக்கு தெரியாமல் இருந்தது என்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சசிகலா கூட இருந்தவர்கள் தப்பு செய்து இருக்கிறார்கள் என்பதை மறுக்கவே முடியாது. ஆனால் இவர்களுக்கு தெரிந்திருந்தால் இவர்கள் இரண்டு பேரும் கலந்து பேசி தவறு செய் தவர்களை நீக்கி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு துரோகி மன் னிக்கவே முடியாது என்று சொல்வது தான் ஏற்க முடியாது. காரணம் செய் தது எல்லாம் இவர்கள் இரண்டு பேரும்தான். ஆனால் தனக்கு எது வுமே தெரியாது என்று சொல்வது துரோகம் இல்லையா? ஹைதராபாத் திராட்சை தோட்டம், போயஸ் தோட்டம் தவிர எல்லாவற்றிலும் இரண்டுபேருக்கும் பங்கு உண்டு. ஏன் ஓட்டு அடையாள அட்டை முதல் ரேஷன் கார்டுவரை போயஸ் முகவரியில்தானே இருக்கிறது.

நக்கீரன்: அ.தி.மு.க. கட்சி விஷயத்தை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?


திருச்சி வேலுச்சாமி : அண்ணா தி.மு.க.வில் ஜெ. உட்பட யாருக்காவது ஆவியோட பேசுகிற அனுபவம் இருந்தால் எம்.ஜி.ஆர். ஆவியோடு பேச சொல்லுங்கள். அப்போது எம்.ஜி.ஆர். சொல்லுவார். இந்த அண்ணா தி.மு.க. பற்றி பேசுவதற்கு அம்முவை விட அதிக உரிமை கொண்டவர் வேலுச்சாமி தான் என்று சொல்லுவார். அதற்கு விளக்கம் கேட்டால் காலம் வரும் போது சொல்கிறேன்.




சந்திப்பு : ஜெ.டி.ஆர்.
thanks nakkeeran+raj trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக