திங்கள், 23 ஜனவரி, 2012

வெளிநாட்டு நடிகையை ஏமாற்றிய டைரக்டர்


“சொன்ன நேரத்திற்கு வராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்களே” என்று சரோஜாவிடம் கேட்டால், “நான் என்ன வெளிநாடுவரை போயாஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்?” என்று பதில் கேள்வி கேட்டார். “இதென்ன புதுக்கதை? ” என்றதும் சொல்லத் தொடங்கினார். “விண்ணைத் தாண்டும் இயக்குநர் வெளிநாட்டுக்குச் சென்றிருந்த போது பழைய சென்னைப் படத்தில் நடித்த நடிகையைப் பார்த்து, ‘ என் படத்தில் நடிக்க வேண்டும்’ என்று கேட்டாராம். அவரும் சம்மதித்திருக்கிறாராம்” என்றார். “இதில் ஏமாற்றுவதற்கு என்ன இருக்கிறது?” என்று நாம் கேட்டதும், “அடுத்து சூரிய நடிகரை வைத்து இயக்கப்போகும் படத்தில் நாயகியாக நடிக்க வேண்டும் என்று கேட்டதும் நடிகை ஒப்புக்கொண்டாராம். சிறிது நாட்கள் கழித்து, ‘நான் சொன்ன படம் தொடங்க இன்னும் சிறிதுகாலம் பிடிக்கும். அதற்குள், நான் இயக்கும் இந்திப்படத்தில் நடிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாராம். நடிகை அதற்கும் சம்மதித்திருக்கிறார். அதன்பின் ஏற்கனவே எடுத்து நின்றுபோன மழைக்காலப் படத்தைத் திரும்பவும் எடுக்கப் போவதாகவும் அதிலும் நடிக்க வேண்டும் என்றும் கேட்டு சம்மத வாங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். இப்படி ஒரு நடிகர் பெயரைச் சொல்லி ஒரு நடிகையைக் கூப்பிட்டுவிட்டு, அதன்பின் தம்முடைய தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும்
அவரைப் பற்றிய பேச்சுதான் பலமாக இருக்கிறது” என்றவர் அடுத்த விஷயத்துக்குப் போனார்.

http://cinema.dinakaran.com/cinema/SSarojaDetail.aspx?id=3649&id1=7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக