வெள்ளி, 6 ஜனவரி, 2012

கலைஞர் டிவி வாசல் படியைக் கூட என் மகள் மிதிச்சதில்லை.. ராசாத்தி அம்மாள்


சென்னை: கனிமொழிக்கு ஸ்பெக்ட்ரம் பற்றி ஒன்றுமே தெரியாது என்று திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் கூறியுள்ளார். அதேபோல் கலைஞர் தொலைக்காட்சியின் வாசலைக்கூட அவர் மிதித்ததில்லை என்று அவர் கூறி அனைவரையும் அதிரவைத்துள்ளார்.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலய வாசல் வழியாகத்தான் கலைஞர் டிவி அலுவலகத்திற்கே போக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கனிமொழியின் பிறந்தநாள் விழாவை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய ராசாத்தி அம்மாள், ‘’என் மகள் கலைஞர் டி.வி. வாசல்படியை கூட மிதித்தது இல்லை. அவளுக்கு ஸ்பெக்ட்ரம் பற்றி ஒன்றும் தெரியாது. ஒருமுறைகூட ஆ.ராசாவின் அலுவலகத்திற்கு சென்றதில்லை என்றார்.கனி பட்ட கஷ்டம் உங்களுக்குத் தெரியாது
மேலும் திகார் சிறையில் இருந்த கனிமொழி எவ்வளவு கஷ்டங்களையும், சோதனைகளையும் சந்தித்திருக்கிறார் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியாது. சிறையில் எவ்வளவோ வேதனைப்பட்டு இருக்கிறார். அவர் கட்சிக்காகத்தான் இவ்வளவு தண்டனைகளையும், சோதனைகளையும் அனுபவித்து இருக்கிறார்.
படுக்கப் பாய் கூட தரலையே...
திகார் சிறையில் ஒரு நாற்காலி கூட கிடையாது. தரையில்தான் உட்கார்ந்து இருக்கவேண்டும். படுப்பதற்கு ஒரு பாய்கூட கிடையாது. சொல்ல முடியாத அளவுக்கு பூச்சிகளால் அவதிப்பட்டார் என்று ராசாத்தி அம்மாள் உருக்கமாக பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக