செவ்வாய், 31 ஜனவரி, 2012

குறளின்மீது ஆரிய முத் திரையைத் திணிப்பதிலேயே ஆர்வ வெறி

கலி.பூங்குன்றன்உடையும் இந்தியா ஆரிய திரா விடப் புரட்டும், அந்நிய தலையீடுகளும் - எனும் தலைப்பில் ஆரிய மனுதர்மச் சுமையைத் தலையில் தாங்கி ராஜீவ் மல்ஹோத்ரா அரவிந்தன் நீலகண்டன் எனும் இருவரால் எழுதப்பட்ட அவதூறு நூலைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் இம்மாதம் 8,9 ஆகிய இரு நாட்களில் அணு அணுவாகச் சிதைத்து உண்மை நிலையை உறுதிபடுத்தினார்.
அந்தவுரை உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? எனும் தலைப்பில் நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. மிக வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
சில முக்கியமான அடிப்படையான அவதூறுகள் மறுக்கப்பட்டுள்ளன. வேரறுக்கப்பட வேண்டிய வேறு சிலவும் உள்ளன.
அதில் குறிப்பாக திருக்குறளை மனுதர்மத்தின் பதிப்பாகக் காட்ட முயலும் அயோக்கியத்தனம் _ புராணம் என்னும் புதைச் சேற்றில் திணிக்க முயலும் திரிநூல்தனம் - கண்டிப்பாக தீ வைத்துக் கொளுத்தப்பட வேண்டிய தாகும்.
ஒரு தமிழனிடம் எந்த இலக்கி யத்தை 2000 ஆண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த ஒன்றாகக் கூறுவாய் என்று கேட்டால் உடனடியாகத் தயக்கமின்றி வரும் பதில் திருக்குறள் என்பதாக இருக்கும். குறள் ஹிந்துப் பண்பாட்டுப் புலத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு ஏதோ தமிழரின் தனித்தன்மை கொண்ட ஒழுக்கவியல் நூலாகக் கருதப்பட்டதும் போல் தனது மிஷனரி செயல் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார்
இந்த வரிகளில் உள்ள பார்ப்பனர் களுக்கே உரித்தான விஷமத்தனத்தைக் காணத் தவறக் கூடாது.
ஒரு தமிழனிடம் கேட்டால்.. என்று தொடக்கத்திலேயே ஒரு இடக்கு முடக்கு! அப்படி என்றால் இவர்கள் யார்?... வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடலாம்.
அடுத்தது.. ஏதோ தமிழரின் தனித் தன்மை கொண்ட ஒழுக்க நூலாகக் கருதப்பட்டதும்! என்று தெனாவெட் டான எழுத்துகள் தமிழர்களின் ஒழுக்க வியல் நூலாகக் கருதப்பட்டதாம் இதன் பொருள் என்ன? தமிழர்களின் ஒழுக்கவியல் நூலாக இவர்கள் கருதவில்லை என்பது இந்த வரிக்குள் இருக்கும் பூனைப் பதுங்கல்!
மூன்றாவதாக குறள் ஹிந்துப் பண்பாட்டுப் புலத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டதாம்...
இங்கேதான் கோணிப்பைக்குள் இருக்கும் பூனை வெளியில் வந்து மியாவ் மியாவ் என்று கத்துகிறது.
ஹிந்துப் பண்பாட்டிலிருந்து திருக்குறள் வெட்டி எடுக்கப்பட்டதே தவிர, தமிழர்களின் ஒழுக்கவியலாகக் கருத முடியாது என்று சொல்ல வருவது - அவர்களுக்கே உரித்தான தமிழ், தமிழன் என்று சொன்னால் அவற்றின் மீது விழுந்து கடிக்கும் துவேஷ நச்சுப் பற்கள்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளின் கோட்பாடு எங்கே? அந்தப் பிரம்மாவானவர், இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத் தார்க்கு இம்மைக்கும் மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித் தனியாகப் பகுத்தார் (மனுதர்மம் - அத்தியாயம் 1 சுலோகம் 87).
இப்படி பிறப்பின் அடிப்படையில் பேதத்தைக் கற்பித்து அவர்களுக்குத் தனித்தனியாக கருமங்களையும் _ கடவுளே உண்டாக்கினார் என்கிற மனுதர்மம் எங்கே?
வள்ளுவர் செய்திருக்குறளை மறுவற
நன்குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி
ஒரு குலத்துக்கொரு நீதி?
என்று சாட்டை கொண்டு முகத்தில் சாத்தினார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை. அதற்குப் பிறகாவது பார்ப் பனப் பன்னாடைகளுக்கு நற்புத்தி வரவில்லையே!
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம் (குடிஅரசு 10.5.1936) என்றாரே - தந்தை பெரியார் - ஒவ்வொரு சொல்லும் கோடி பெறும்.
பல இந்திய வாழ்வியல் நூல்களில் உதாரணமாக அர்த்த சாஸ்திரம் போன்றவற்றில் மூன்று விழைவுகளில் (திரிவர்க்க) அதாவது தர்ம (அறம்) அர்த்த (பொருள்) காம (இன்பம்) ஒத்திசைவு இருக்க வேண்டும் எனச் சொல்லப்படுவதை பொருளாதார நிபுணர் ரத்தன்லால் போஸ் சுட்டிக் காட்டுகிறார். நீதியரசர் ராமா ஜோய்ஸ் பிரசித்தி பெற்ற ஹிந்து ஸ்மிருதியான மனுதர்ம சாஸ்திரத்தில் இதே திரி வர்க்கப் பாதையே இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
ஆக திருவள்ளுவர் மூன்று புரு ஷார்த்தங்களை மட்டும் குறிப்பிடுவதில் தனித் தன்மை ஏதுமில்லை. அவர் பாரதம் அளாவிய ஒரு பார்வையையே இதன் மூலம் முன் வைக்கிறார் என்று எழுதுகிறார்கள்.
திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று சொல்லப்படுவது அவாளின் அர்த்த சாஸ்திரத்தில் சொல்லப்பட் டவையாம். இது உண்மைக்கு மாறானது என்பது ஒருபுறம் இருக்கட்டும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மனுதர்ம சாஸ்திரத்திற்கு உண்மைக்கு மாறாகப் புரட்டுத்தனமாக வக்காலத்து வாங்குவது மூலம் இவர்கள் யார்? இவர்களின் நிறம் என்ன என்பது எளிதில் விளங்கும்.
பரிமேலழகர் என்ற பார்ப்பனர் முதல் அவரின் பாதந்தாங்கிய மனிதர் கள் வரை குறளின்மீது ஆரிய முத் திரையைத் திணிப்பதிலேயே ஆர்வ வெறி கொண்டு திரிகின்றனர்.
திருக்குறளின் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம் என்று கூறுகிறார் என்றால் பரிமேலழ சருக்கு எவ்வளவு அசட்டுத் துணிச்சல் இருந்திருக்க வேண்டும் - அது பச்சையான பாசிசம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?
மக்கள் பேறு என்பதைப் புதல் வரைப் பெறுதல் என்று மாற்றியுள் ளார். பரிமேலழகருக்கு முன் உரை எழுதிய மணக்குடவர்கூட மக்கள் பேறு என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.
பரிமேலழகர் என்னும் மனுவின் மகாபுத்திரரோ அதனைப் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றியமைத்ததற்குக் காரணம் _ அவரின் மனுதர்மப் புத்தி.
தந்தையை புத் என்னும் நரகத்திற் சாராமல் காக்கின்றபடியால் மைந் தனுக்கு புத்திரன் என்ற பெயராயிற்று இது பிரமனாலேயே கூறப்பட்டது என்கிறதே மனுதர்மம் (அத்தியாயம் 9 - சுலோகம் 138).
இதற்காகத்தான் அதிகாரத்தில் தலைப்பையே மாற்றிய தில்லுமுல்லுத் தனத்தை செய்துள்ளார்.
கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு அதிகாரங்களைப் பாயிரத்தில் அடக்கிக் காட்டுகிறார் பரிமேலழகர்; பாயிரத்தை வள்ளுவரே இயற்றவில்லை என்பது ஆய்வறிஞர் வ.உ.சி. அவர்களின் கருத்தாகும்.
இன்னும் சொல்லப் போனால் திருக்குறளில் கடவுள் என்ற சொல்லோ கோவில் என்ற சொல்லோ கிடையாது.
சமயக்கணக்கா மதிவழி கூறாது
உலகியல் கூறி பொருளிது வென்ற
வள்ளுவன் என்கிறது கல்லாடம்
திருவள்ளுவர் யார் தெரியுமா? பகவன் என்ற பிராமணனுக்கும், ஆதி என்ற பறைச்சிக்கும் பிறந்தவர் என்று கதை கட்டுவதும் பார்ப்பனரே!  ஏன் என்றால் அவாளின் அகராதிப்படி அறிவாளி பார்ப்பன விந்துக்குத் தவிர வேறு யாருக்கும் பிறக்க முடியாது என்பதாகும்.
இது தொடர்பாக பார்ப்பனப் பண்டிதருக்கு நேருக்கு நேர் சூடு கொடுத்தவர் அயோத்திதாசப்பண்டிதர் பெருமகனார் ஆவார்.
1892இல் சென்னையில் மகாஜன சபை கூட்டம் திரு. சிவநாமசாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது வள்ளுவர் பார்ப்பன விந்துக்கு பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார் சுக்கில-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் திரு.க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.
அதற்கு திரு. சிவநாமசாஸ்திரி சரி, கேளும் என்றார். நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவு படுத்தப்படும் பறையர்கள், என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ, பி.ஏ, படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந் திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர் என்றார். அதற்கு திரு. சிவநாமசாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.
பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து பெருங்குற்றங் களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைக்கப்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார் களென்று நீர் நினைக்கிறீர் என்று கேட்டார்.
திரு.சிவ.நாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திரு திரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் திரு.க.அயோத்திதாச பண்டிதர், ஏன்? பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும், என்று சினந்து கேட்டுக் கொண்டி ருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், திரு.பி.அரங்கைய நாயுடும், திரு.எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் திரு.க.அயோத்திதாச பண்டிதரை அமைதிபடுத்தினார்கள்.
திரு.சிவ நாம சாஸ்திரியை கூட்டத் திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். திரு.சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத் திலிருந்து நழுவி விட்டார்.
1796இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த எல்லீஸ் துரையவர்கள் தமிழ் படிக்க விரும் பினர்ர்.
அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றைத் தாம் வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப் பித்தவர் அயோத்திதாசரின் பாட்டனா ரான கந்தசாமி என்பவர்.
எல்லீஸ் தனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பிராமணர்களிடம் கந்தசாமி திருக்குறள் கொடுத்தாரென் றார். அதற்கு அவர்கள், அவர் தீண்டத் தகாதவர், அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத்தகாதது என்றனர். காரணம் வள்ளுவர் புலச்சியின் மகன் என்பது அவர்கள் எண்ணம்.
ஏன் இப்படி பிராமணர்கள் கருகிறார்கள் என்று கந்த சாமியை அழைத்து எல்லீஸ்துரை கேட்க எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம்.
எங்கள் வீதிக்குள் பிராமணர்கள் வந்தால் உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள் என்று கூறினாராம்.
உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத் திலும் மொழி பெயர்த்தார்.
1819இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.
(ஆதாரம்: குறளும் அயோத்திசாசரும் என்ற தலையங்கத்தில் செந்தமிழ்ச் செல்வி மார்ச் 2000)
இப்படியாக தொன்றுதொட்டுப் பார்ப்பனர்களுக்கு தமிழையும், திருககுறளையும் திட்டுவதில் இழிவுப் படுத்துவதில் ஆனந்தமோ ஆனந்தம்!
மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர் ஆண்டாளின் திருப்பாவையில் இடம் பெற்ற தீக்குறளைச் சென்றோதோம் என்னும் வரிக்கு எப்படி பொருள் சொன்னார்?
தீய திருக்குறளை படிக்க மாட்டோம் என்று வீம்புக்கு வம்பு இழுத்துக் கூறினார்.
குறளை என்றால் குள்ளம், கோள் சொல்லல், குற்றம் என்று பொருள் (உ.வே. சாமிநாதய்யர் முன்னுரையுடன் கூடிய மதுரைத் தமிழ்ப் பேரகராதி).
காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எவ்வளவு குள்ள உணர்வும், கோள் சொல்லும் புத்தியும், குற்றவாளியாகவும் இருந்திருந்தால் ஆண்டாளின் பாடல் வரிக்கு இப்படிப் பாட பேதம் செய்வார்?
இப்படித்தான் கொலைக் குற்றத் துக்காக நீதிக் கூண்டில் நின்று வேலூர் சிறைச்சாலையில் 61 நாள்கள் கம்பி எண்ணிக் கொண்டிருந்த காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி உளறித் தொலைத்து நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டார்.
திருக்குறளில் உள்ள அறத்துப் பாலை அதிலும் முதல் பத்து குறட் பாக்களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு, பொருட் பால், காமத்துப் பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று காஞ்சிமடத் தலைவரான தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி துறவியார் திருக்குறளைப் பற்றித் திரிபான முறையில் தம் கருத்தைச் கூறயிருப்பது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது. காஞ்சி மடத்தார் அடுத்தடுத்து திருக்குறளை பற்றிப் புறங்கூறுவதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், அக்கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டுமென காஞ்சி மடத்தை ஈரோடு திருக்குறள் பேரவை கேட்டுக் கொள்கிறது. (திருக்குறள் முனுசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் -  தீர்மானம் 12.4.1982).
இந்திய அரசின் அட்டர்னி ஜென ரலாக இருந்த பராசுர அய்யங்காரின் தந்தையாரான கேசவ அய்யங்கார் என்பாரும் ஸ்ரீவள்ளுவர் உள்ளம் என்ற நூலில் சமஸ்கிருதத்திலிருந்து தொகுக்கப்பட்டதுதான் திருக்குறள் என்று எழுதியதற்காக _ சென்னைப் பெரியார் திடலில் அன்றைய பகுத்தறி வாளர் கழக மாநிலத் தலைவர், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் முனைவர் மா. நன்னன் அவர்கள் சிறப் பான மறுப்புரையை ஆதாரக் குவியல்களுடன் தந்தார் (4.3.1986 மற்றும் 5.3.1986).
பெரிய வாச்சான் என்பவர் ஒரு வைணவ அய்யங்கார் பார்ப்பனர்; அவர் பெரிய திருமடல் கண்ணிக்கு உரை எழுதினார்.
தென்னுரையில் கேட்டதுண்டு என்ற வரிக்கு அவர் எழுதிய உரை என்ன?
மிலேச்ச சாதி பிதற்றும் தமிழின் கண் கேட்டறிவதுண்டு என்று எழுதவில்லையா?
பார்ப்பனர் தமிழின் பால், தமிழன்பால் கொண்டிருக்கும் இந்தப் பிறவித் துவேஷ நஞ்சு என்பது அவர் கள் கூறும் ஆலகால விஷத்தைவிடக் கொடுமையானது.
உண்மையைச் சொல்லப் போனால் ஆரிய பண்பாட்டை, தர்மத்தை எதிர்த்து எழுதப்பட்டதுதான் திருக் குறள் என்பது தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு.
வள்ளுவர் குறளை எழுதிய காலம் தமிழ்நாடு ஆரிய ஆதிக்கத்தில் ஆழ்ந்து கிடந்த காலம்;
குறள் தோன்ற வேண் டிய அவசியம்கூட ஆரிய ஆதிக்கம் தோன்றி மக்களை அழித்து நமது கலாச்சாரத்தை ஒழித்துக் கொண்டிருந்த நிலையைத் தடுப்பதற்காகத்தான் வள்ளுவர் குறளை எழுதினார் என்கிறார்.
தந்தை பெரியார் (ஆதாரம்: திருக்குறளும் பெரியாரும் பக்கம் 46-47).
மனு மாண்டு விட்டார்; ஆனால் அவரின் கொள்ளுக் கொள்ளுப் பேரர்கள் இன்னும் பூணூலோடு திரிந்து கொண்டு இருக்கிறார்கள் - எச்சரிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக